முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

'வணங்கான்' படத் தலைப்பு: இயக்குநர் பாலா பதிலளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவு

வெள்ளிக்கிழமை, 13 செப்டம்பர் 2024      தமிழகம்
Bala 2024-09-13

சென்னை, வணங்கான் படத் தலைப்பு விவகாரத்தில் இயக்குநர் பாலா, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஆகியோர் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பான மேல்முறையீட்டு மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது படத் தலைப்பு விவகாரத்தில் இயக்குநர் பாலா, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஆகியோர் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக வணங்கான் படத் தலைப்பை பயன்படுத்த தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, படத்தின் தலைப்பை பயன்படுத்த தடை விதிக்க முடியாது எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்தார். இயக்குநர் பாலா இயக்கத்தில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் வணங்கான். இதில் அருண் விஜய் நாயகனாகவும், ரோஷினி பிரகாஷ் நாயகியாகவும் மிஷ்கின் முக்கியக் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

இதன் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் கவனம் பெற்றது. அதிரடியான சண்டைக்காட்சிகளும் வசனங்களும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன. தொடக்கத்தில் இதில் சூர்யா நடிக்கவிருந்தார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இதிலிருந்து விலகிய சூர்யாவுக்கு பதிலாக அருண் விஜய் நடித்ததும் குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து