முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

100 ஏரி திட்டத்திற்கு தேவையான நிதியை அரசு ஒதுக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

வெள்ளிக்கிழமை, 13 செப்டம்பர் 2024      தமிழகம்
eps

சென்னை, அத்திக்கடவு -அவிநாசி திட்டம் வரலாற்று சாதனை திட்டம் என தெரிவித்துள்ள அ.தி.மு.க. பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி,  100 ஏரி திட்டத்திற்கு தேவையான நிதியை தமிழக அரசு ஒதுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் சேலத்தில் அளித்த பேட்டியில், அத்திக்கடவு- அவிநாசி திட்டம் கொண்டு வர வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை வைத்திருந்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று நானே அடிக்கல் நாட்டி வைத்தேன். தேவையான நீர் குளம், குட்டைகளில் நிரப்ப ஜெயலலிதா அரசு முதற்கட்டமாக ரூபாய் ஆயிரம் கோடி நிதி ஒதுக்கி இருந்தது.

கொரோனா காலத்தில் ஒரு ஆண்டு இந்த பணி தொய்வு ஏற்பட்டது. அப்போது 85 சதவீதம் பணி நிறைவடைந்து இருந்தது. மீதம் உள்ள பணிகள் முடிந்து தற்போது திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் வரலாற்று சாதனை திட்டம். ஏழை, எளிய விவசாய மக்களுக்கு இந்த திட்டம் மகிழ்ச்சி அளித்துள்ளது. போராட்டக் குழுவினர் நன்றியை தெரிவித்துள்ளனர்.

இந்த திட்டம் போல் 100 ஏரி திட்டம் நடந்து வருகிறது. நாங்கள் குரல் கொடுத்தால் நான்கு ஏரிகளுக்கு தண்ணீர் விடுகிறார்கள். மற்ற ஏரிகளுக்கும் தண்ணீர் விட வேண்டும். வேகமாக இந்த பணி நடக்க தேவையான நிதி ஒதுக்க வேண்டும். அ.தி.மு.க. கொண்டு வந்த திட்டம் என கருதாமல் நிதி ஒதுக்கி திட்டத்தை முடிக்க வேண்டும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து