முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

11 நாள் விரதம் இருந்து மன்னிப்பு கேட்க போகிறேன்: பவன் கல்யான்

ஞாயிற்றுக்கிழமை, 22 செப்டம்பர் 2024      இந்தியா
Pawan-Kalyan 2024-03-22

Source: provided

அமராவதி : புகழ்பெற்ற திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்கு கொழுப்பு கலப்படம் செய்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து, வெங்கடேசப் பெருமானுக்கு 11 நாள் விரதம் இருக்க போவதாக, ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் அறிவித்துள்ளார். 

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, திருப்பதி லட்டுகளில் விலங்குகளின் கொழுப்பு உள்ளிட்ட தரமற்ற பொருட்களை முந்தைய அரசு பயன்படுத்தியதாக குற்றம்சாட்டியது அரசியல் விவாதத்தை ஏற்படுத்தியது. லட்டுகளில் விலங்கு கொழுப்பு கலந்திருந்ததை திருப்தி தேவஸ்தானம் உறுதி செய்தது. 

இந்நிலையில், வெங்கடேசப் பெருமானுக்கு 11 நாள் விரதம் இருக்க போவதாக, ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்கு கொழுப்பு கலப்படம் செய்தது குறித்து நான் மிகவும் வேதனையடைந்தேன். அனைவருக்கும் இந்த துயரமான தருணத்தில் வலிமை தருமாறு வெங்கடேசப் பெருமானைப் பிரார்த்திக்கிறேன்.

இந்த தருணத்தில், நான் கடவுளிடம் மன்னிப்புக் கோரி, பரிகார சபதம் எடுத்து, பதினோரு நாட்கள் விரதம் இருக்க வேண்டும் என்று ஒரு தீர்மானம் எடுக்கிறேன். 

11 நாள் பரிகார தீட்சை முடிவில் அக்டோபர் 1, 2 தேதிகளில் திருப்பதி சென்று இறைவனை நேரில் தரிசனம் செய்து பாவமன்னிப்பு கோரி, பிறகு இறைவனிடம் பரிகாரத் தீட்சை நிறைவு செய்வேன் என குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து