முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதிய பாம்பன் பாலத்தில் 90 கி.மீ வேகத்தில் ரயில் சோதனை ஓட்டம்

வியாழக்கிழமை, 17 அக்டோபர் 2024      தமிழகம்
Pamban-Bridge

Source: provided

ராமேஸ்வரம்: புதிய பாம்பன் பாலத்தில் ரெயில் 90 கிலோமீட்டர் வேகத்தில் கடந்து சென்றது.

ராமநாதபுரம் பாம்பன் கடலின் நடுவே ரூ.545 கோடியில் புதிதாக ரெயில் பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. கடலுக்குள் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் அமைக்கப்பட்டுள்ள இந்த பாலத்தின் மையப் பகுதியில் 77 மீட்டர் நீளமும், 650 டன் எடையும் கொண்ட செங்குத்து வடிவிலான திறந்து மூடும் தூக்குப்பாலம் உள்ளது.

இந்த பாலத்தில் பல்வேறு சோதனைகள் நடைபெற்று முடிந்துள்ளன. புதிய ரெயில் பாலத்தை ஆய்வு செய்ய சென்னையில் இருந்து கடந்த 3 தினங்களுக்கு முன் தெற்கு ரெயில்வே கூடுதல் பொது மேலாளர் கவுசிக் கிஷோர், மண்டபம் வந்தார். தொடர்ந்து பாம்பன் வந்த அவர், டிராலியில் அமர்ந்து புதிய ரெயில் பாலத்தை பார்வையிட்டார். அப்போது ஆய்வுக்காக தூக்குப்பாலமானது 17 மீட்டர் உயரத்திற்கு முழுவதுமாக திறக்கப்பட்டது. பின்னர் மீண்டும் மூடப்பட்டது.

இந்த நிலையில், புதிய பாம்பன் பாலத்தில் நேற்று ரெயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. மண்டபம் முதல் ராமேஸ்வரம் வரை புதிய பாம்பன் பாலத்தில் இந்த சோதனை நடைபெற்றது. அப்போது 90 கிலோமீட்டர் வேகத்தில் புதிய பாலத்தை சரக்கு ரெயில் கடந்து சென்றது. இம்மாதத்திற்குள் பாம்பன் புதிய ரெயில் பாலம் திறக்கப்படும் என தெற்கு ரெயில்வே கூடுதல் பொது மேலாளர் கவுசிக் கிஷோர் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து