முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தக்காளி விலை விரைவில் குறையும் மத்திய அரசு தகவல்

வியாழக்கிழமை, 17 அக்டோபர் 2024      இந்தியா
tomato

Source: provided

புதுடெல்லி: விளைச்சல் பாதிக்கப்பட்டதால் விலை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ள மத்திய அரசு, தக்காளி விலை விரைவில் குறையும் என்றும் தெரிவித்துள்ளது.

அத்தியாவசிய சமையல் பொருட்களில் ஒன்றான தக்காளியின் விலை கடந்த சில மாதங்களாக சீராக இருந்து வந்த நிலையில், திடீரென நாடு முழுவதும் விலை அதிகரித்தது. சில மாநிலங்களில் விலை 100 ரூபாயை கடந்தது. இதனால் இல்லத்தரசிகள் அதிர்ச்சியடைந்தனர்.  இந்த விலை ஏற்றத்துக்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டது. குறிப்பாக, தென் மாநிலங்களில் விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்து குறைந்ததால் விலை அதிகரித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அதிகரித்து வரும் தக்காளியின் விலை விரைவில் குறையும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள் துறை செயலாளர் நிதி காரே கூறுகையில்., தென் மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் பருவமழை தாக்கம், பயிர் சேதம் மற்றும் பூச்சி தாக்குதலால் விளைச்சல் பாதிக்கபட்டுள்ளதால் விநியோகம் குறைந்துள்ளது. இதனால் விலை ஏற்றம் ஏற்பட்டுள்ளது. வரத்து குறைந்ததால் வட மாநிலங்களிலும் விலை அதிகரித்துள்ளது. ஒரு கிலோ தக்காளியின் விலை தற்போது 100-ஐ தாண்டியுள்ளது.

மராட்டியத்தில் இருந்து விநியோகிக்கப்பட்டு வரும் தக்காளியின் அளவு விரைவில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம். இது டெல்லியில் விலையை கட்டுப்படுத்த உதவும். டெல்லி மற்றும் மும்பையில் ஒரு கிலோ ரூ.65 என்ற மானிய விலையில் அரசு தொடர்ந்து விற்பனை செய்யும். விளைச்சல் அதிகரிப்பதன் மூலம் விலை விரைவில் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து