முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோவை மாநகரில் 3 பஸ் நிலையங்கள் கட்ட ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு

செவ்வாய்க்கிழமை, 31 டிசம்பர் 2024      தமிழகம்
Bus 2024 08 05

Source: provided

கோவை : கோவை மாநகரில் 3 பஸ் நிலையங்கள் கட்டுவதற்கு ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சி மாமன்ற கூட்டம், மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் உள்ள விக்டோரியா ஹாலில் நேற்று முன்தினம் நடந்தது. மேயர் ரங்கநாயகி தலைமை தாங்கினார். மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், துணை மேயர் வெற்றிசெல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், மாநகரில் மேற்கொள்ளப்பட வேண்டிய வளர்ச்சி பணிகள் குறித்து மொத்தம் 130 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதன்பின்னர் விவாதம் தொடங்கியது.

72-வது வார்டு கவுன்சிலர் கார்த்திக் செல்வராஜ் , 69-வது வார்டு சரவணகுமார் , 44-வது வார்டு காயத்ரி, 47-வது வார்டு பிரபாகரன் ஆகியோர் பேசுகையில், கோவை சாயிபாபா காலனி மேட்டுப்பாளையம் ரோட்டில் கட்டப்பட்டு வரும் மேம்பாலத்தை, அச்சாலையில், தெற்கு பகுதியில் அன்னபூர்ணா ஓட்டல் வரையிலும், வடக்கு பகுதியில் சங்கனூர் சாலை சந்திப்பு போலீஸ் செக் போஸ்ட் வரையிலும் நீட்டிக்க வேண்டும் என்றனர்.

45வது வார்டு கவுன்சிலர் பேபிசுதா பேசுகையில், சாயிபாபாகாலனி பகுதியில் மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள பஸ் நிலையம் பராமரிப்பு இன்றி கிடக்கிறது. இதையும் முழுமையாக பராமரிக்க வேண்டும். அதிகாரிகள், வார்டுகளுக்குள் ஆய்வுப்பணிக்கு வரும்போது, அந்தந்த வார்டு கவுன்சிலர்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும் என்றார்.

26-வது வார்டு கவுன்சிலர் சித்ரா வெள்ளிங்கிரி பேசுகையில், 26-வது வார்டில் பாழடைந்து கிடக்கும் பூங்காக்களை போர்க்கால அடிப்படையில் சீர்படுத்த வேண்டும். சாக்கடை கால்வாய் நடுவில் உள்ள மின்கம்பங்களை அகற்றிவிட்டு, மழைநீர் வடிகால் பாதையை சீரமைக்க வேண்டும். போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள சாலையோர ஆக்கிரமிப்புகளை இருபுறமும் அகற்ற வேண்டும் என்றார்.

100-வது வார்டு கவுன்சிலரும், மாமன்ற ஆளும்கட்சி குழு தலைவருமான இரா.கார்த்திகேயன் பேசுகையில், வெள்ளலூர் குப்பை கிடங்கு காரணமாக சுற்றுவட்டார பகுதி மக்கள் சுகாதார சீர்கேட்டால் அவதியுறுகின்றனர். சுற்றுவட்டார பகுதி முழுவதும் நிலத்தடி நீர் மாசுபடுகிறது. எனவே, இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணவேண்டும். வார்டு முழுவதும் தெருவிளக்கு பராமரிப்பில் தொய்வு ஏற்படுகிறது. இதை சீர்படுத்த வேண்டும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து