முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தென் கொரிய விமான விபத்தில் இருவர் மட்டும் உயிர் தப்பியது எப்படி?

செவ்வாய்க்கிழமை, 31 டிசம்பர் 2024      உலகம்
South-Korea 2024-12-29

Source: provided

சியோல் : தென் கொரிய விமான விபத்தில் இருவர் மட்டும் உயிர் தப்பியது எப்படி என்ற தகவல் வெளியாகியுள்ளது.

தென் கொரியாவில் உள்ள முவான் சர்வதேச விமான நிலையத்தில் விமானம் ஒன்று ஓடுபாதையில் இருந்து விலகி தரையில் மோதியதில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிக்கி இதுவரை 179 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், இது தென் கொரியாவில் ஏற்பட்ட மிக கோரமான விமான விபத்தாக மாறி இருக்கிறது.

தாய்லாந்தில் இருந்து தென் கொரியாவுக்கு திரும்பிய இந்த விமானத்தில் 175 பயணிகள், ஆறு பணியாளர்கள் உள்பட மொத்தம் 181 பேர் இருந்தனர். இந்த விமானம் விபத்தில் சிக்கியதில் 179 பேர் உயிரிழந்த நிலையில், இருவர் மட்டும் உயிர்பிழைத்தனர். விபத்தில் சிக்கிய இருவர் மட்டும் உயிர் பிழைத்தது எப்படி என தெரியவந்துள்ளது.

அதன்படி விபத்தில் சிக்கிய விமானத்தில் இருந்த இருவர் விமானத்தின் கடைசி பகுதியில் அமர்ந்து இருந்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வர்த்தக ரீதியிலான விமானங்களின் கடைசி பகுதி மிகவும் பாதுகாப்பான ஒன்றாக அறியப்படுகிறது.

2015-ம் ஆண்டு டைம் இதழ் சார்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் விபத்தில் சிக்கும் விமானங்களில் மிகவும் பாதுகாப்பான பகுதியாக அதன் பின்புறம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தென் கொரிய விமான விபத்தில் உயிர்பிழைத்த இருவர்- 32 வயதான லீ மற்றும் 25 வயதான வொன் ஆவர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து