முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லி மீது கவனம் செலுத்துங்கள்: கவர்னருக்கு முதல்வர் அதிஷி பதில்

செவ்வாய்க்கிழமை, 31 டிசம்பர் 2024      இந்தியா
Adishi 2024-02-05

Source: provided

டெல்லி : டெல்லி மீது கவனம் செலுத்துங்கள் என்று தன்னை விமர்சனம் செய்த கவர்னருக்கு டெல்லி முதல்வர் அதிஷி பதிலடி கொடுத்துள்ளார்.

டெல்லி மாநில மதுபானக் கொள்ளை தொடர்பான மோசடி வழக்கில் முதல்வராக இருந்த அரவிந்த் கெஜ்ரிவால், ஜாமீன் பெற்று சிறையில் இருந்து வெளியே வந்த உடன் மக்கள் தன்னை நிரபராதி என அழைக்கும் வரை முதல்வர் பதவியை பெற மாட்டேன் என தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் அதிஷி டெல்லி முதல்வராக கடந்த செப்டம்பர் 21 ஆம் தேதி பதவி ஏற்றார்.

இந்த நிலையில்தான் அதிஷியை தற்காலிக முதல்வர் என அரவிந்த கெஜ்ரிவால் அழைத்து வருவது வேதனையளிக்கிறது என டெல்லி மாநில துணைநிலை கவர்னர் சக்சேனா தெரிவித்துள்ளார். அதிஷியை தற்காலிக முதல்வர் என அரவிந்த் கெஜ்ரிவால் அழைப்பது வேதனையளிக்கிறது என்று அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் கவர்னர் சக்சேனாவுக்கு அதிஷி பதிலடி கொடுத்துள்ளார். தனது புத்தாண்டு வாழ்த்து அறிக்கையில் சக்சேனாவின் கருத்துக்கு பதிலளித்த அதஷி, வரவிருக்கும் புத்தாண்டில் கவர்னர் தனது கட்டைப் பை அரசியலை விட்டுவிட்டு மக்கள் நலனில் கவனம் செலுத்துவார் என்று எதிர்பார்க்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் கவர்னரின் நடவடிக்கைகளில் உள்ள பிரச்சனைகளை சுட்டிக்காட்டிய அதிஷி, ஆக்கப்பூர்வமான வகையில் ஒத்துழைப்பதை விட விமர்சனம் செய்வதற்கே கவர்னர் முக்கியத்துவம் அளிக்கிறார். தேவையில்லாத குறுக்கீடுகளால் முக்கிய பணிகளில் குறுக்கிட்டு தாமதம் செய்கிறார். மகிளா சம்மான் யோஜனாவை நிறுத்தினார்

உங்களுக்கு நேரடியாக கொடுக்கப்பட்ட ஒரே வேலையான நகரின் பாதுகாப்பை உறுதி செய்யும் வேலையிலும் கவர்னர் முற்றிலுமாக தோல்வியடைந்துள்ளீர்கள். டெல்லி கவர்னர் மாளிகை இப்போது பா.ஜ.க.வின் பினாமி அலுவலகமாக செயல்படுகிறது என்று விளாசிய அதிஷி, தற்காலிக முதல்வர் என்ற கருத்து குறித்து எழுதுகையில், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் அனைத்து உறுப்பினர்களும் உண்மையில் தற்காலிகமானவர்கள் மற்றும் காலம் வரை மட்டுமே பதவியில் இருப்பார்கள் என்பது நமது நாட்டின் ஜனநாயகக் கொள்கைகளுக்கு ஒரு சான்று.

ஜனநாயகத்தின் இந்த யதார்த்தத்தை எடுத்துக்காட்டும் எந்தவொரு அறிக்கையையும் நீங்கள் புண்படுத்துவதைக் கண்டிக்கிறேன். இதற்கு பதிலாக டெல்லி மீது கவனம் செலுத்துங்கள் என்று காட்டமாகத் தெரித்துள்ளார்.   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து