முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் வெடிகுண்டு தாக்குதல்: பாதுகாப்பு படை வீரர்கள் 8 பேர் உடல் சிதறி பலி

திங்கட்கிழமை, 6 ஜனவரி 2025      இந்தியா
Nakselit

Source: provided

ராய்ப்பூர் : பாதுகாப்பு படையினர் நக்சலைட்டுகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையை முடித்துக்கொண்டு திரும்பியபோது தாக்குதல் நடத்தப்பட்டதில் 8 பாதுகாப்பு படை வீரர்கள் பலியாகினர்.

சத்தீஸ்கார் மாநிலத்தில் தொடர்ந்து வன்முறை தாக்குதல் மற்றும் அரசு சொத்துக்களை சேதப்படுத்தி வரும் நக்சலைட்டுகளை ஒடுக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்கு பதிலடியாக பாதுகாப்பு படையினர் மற்றும் காவல்துறையை நக்சலைட்டுகள் குறிவைத்து தாக்குகின்றனர். அவ்வகையில், பிஜப்பூரில் பாதுகாப்பு படையினரின் வாகனத்தை குறிவைத்து நக்சலைட்டுகள் நேற்று வெடிகுண்டு தாக்குதல் நடத்தி உள்ளனர். 

தண்டேவாடா, பிஜப்பூர் மற்றும் நாராயண்பூர் ஆகிய மாவட்டங்களில் நக்சலைட்டுகளுக்கு எதிரான கூட்டு தேடுதல் வேட்டையை முடித்துக்கொண்டு தண்டேவாடா மாவட்ட ரிசர்வ் படையினர் ஒரு வாகனத்தில் திரும்பியபோது, சாலையில் புதைத்து வைத்திருந்த வெடிகுண்டை நக்சலைட்டுகள் வெடிக்கச் செய்தனர். இதில், வாகனம் தூக்கி வீசப்பட்டு சிதறியது. வாகனத்தில் இருந்த 8 வீரர்கள் மற்றும் டிரைவர் உடல் சிதறி பலியாகினர். கடந்த 3 நாட்களுக்கு முன்பு பஸ்தார் மாவட்டத்தில் நடந்த மோதலில் 5 நக்சலைட்டுகள் கொல்லப்பட்ட நிலையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையே சத்தீஸ்கர் முதல்வர் விஷ்ணு தியோ சாய், பாதுகாப்புப் படை வீரர்களின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்ததோடு, இந்தச் சம்பவம் மிகவும் வேதனையானது என்று கூறியுள்ளார். தியாகிகளின் குடும்பங்களுக்கு எனது இரங்கல்கள். வீரமரணம் அடைந்த வீரர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன், அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு பலம் கிடைக்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன் என்றார். நக்சலைட்டுகள் பஸ்தரில் நடந்து வரும் நக்சல் ஒழிப்புப் பிரச்சாரத்தால் விரக்தியடைந்து, விரக்தியில் இத்தகைய கோழைத்தனமான செயல்களைச் செய்கின்றனர். ராணுவ வீரர்களின் தியாகம் வீண் போகாது, நக்சலிசத்தை ஒழிப்பதற்கான எங்களது போராட்டம் வலுவாக தொடரும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து