முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாரத் போல் அமைப்பு உருவாக்கம்: உலகளாவிய அணுகலை மேம்படுத்தும்: மத்திய அமைச்சர் அமித்ஷா பெருமிதம்

செவ்வாய்க்கிழமை, 7 ஜனவரி 2025      இந்தியா
Amit-Shah 2023-11-17

Source: provided

புதுடில்லி : டில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில், மத்திய புலனாய்வுத் துறை (சி.பி.ஐ.,) உருவாக்கியுள்ள பாரத் போல் இணையதளத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா துவங்கி வைத்தார். 

இந்தியாவில் சர்வதேச காவல் துறையின் தேசிய பணியகமாக உள்ள சிபிஐ அமைப்பானது சட்ட அமலாக்க ஏஜென்சிகள், உட்பட நாடு முழுவதும் உள்ள பல்வேறு புலனாய்வு ஏஜென்சிகளுடன் இணைந்து குற்றவியல் தொடர்பான விஷயங்களில் சர்வதேச புலனாய்வு அமைப்புடன் ஒத்துழைக்க இந்த இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியதாவது: 'இன்டர்போல்' எனப்படும் சர்வதேச குற்ற விசாரணை அமைப்பை போன்று இந்தியாவில் பாரத் போல் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. சி.பி.ஐ., அமைப்பின் கீழ் செயல்படும் அமைப்பு சர்வதேச விசாரணை அமைப்புகளுக்கு உதவும். வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லும் குற்றவாளிகளை பிடிக்க பாரத் போல் அமைப்பு உதவி செய்யும்.

சர்வதேச போலீஸ் உதவியை விரைவாக அணுக முடியும். சி.பி.ஐ.,யால் உருவாக்கப்பட்ட பாரத்போல் போர்டல், நமது விசாரணை நிறுவனங்களின் உலகளாவிய அணுகலை மேம்படுத்தும், அனைவருக்கும் பாதுகாப்பான பாரதம் என்ற அரசாங்கத்தின் பார்வையை நிறைவேற்றும். இன்று ஒரு முக்கிய நாள். நமது நாட்டின் சர்வதேச விசாரணைகளை பாரத்போல் புதிய சகாப்தத்திற்கு கொண்டு செல்லும். குற்றங்களை கட்டுப்படுத்த திறம்பட செயல்பட முடியும். இவ்வாறு அமித்ஷா பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து