முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மோசடி செய்ததாக குற்றச்சாட்டு: 3 சீன கிராண்ட் மாஸ்டர்களுக்கு வாழ்நாள் தடை

வெள்ளிக்கிழமை, 17 ஜனவரி 2025      விளையாட்டு
Chess 2023-10-15

Source: provided

பெய்ஜிங் : சீன செஸ் போட்டிகளில் மோசடி செய்த 41 செஸ் வீரர்களுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சீனாவில் விளையாடப்படும் சீன செஸ் (சியாங்கி) போட்டிகளில் முறைகேட்டில் ஈடுபட்டதற்காக 41 செஸ் வீரர்களுக்கு சிஎக்ஸ்ஏ (சீன சியாங்கி அசோசியேஷன்) அபராதம் விதித்துள்ளது. இதில் 3 கிராண்ட்மாஸ்டர்களுக்கு வாழ்நாள் தடையும் 38 பேருக்கு கடுமையான அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

வாழ்நாள் தடை 

ஜாகோ ஜின்ஜின், வாங் யங், ஜெங்க் வெய்டோங் ஆகிய மூன்று கிராண்ட்மாஸ்டர்களுக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளதாக குளோபல் டைம்ஸ் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், இந்த 3 வீரர்களிடமிருந்த தொழில்நுட்ப பதக்கங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மிதமான மோசடிகளில் ஈடுபட்ட 37 வீரர்கள் போட்டிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்கள். 4 வீரர்களுக்கு கண்டனம் மட்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோசடியில் சிக்கி...

லஞ்சம் வாங்குதல், சூதாட்டத்தில் ஈடுபட்டதற்காக இந்த 41 சீன செஸ் வீரர்களுக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதுமாதிரி நடைபெறுவது இது முதல்முறையல்ல. கடந்த செப்.2024இல் லஞ்சம் வாங்குதல், சூதாட்டத்தில் ஈடுபட்டதற்காக பிரபலமான சீன செஸ் வீரர்களான வாங் டியானி, வாங் யூபேய் ஆகிய இருவருக்கு வாழ்நாள் தடைவிதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சீனாவின் கார்ல்சென்

சீன செஸ் போட்டியில் மாக்னஸ் கார்ல்செனாக புகழப்படுபவர் வாங் டியானி. இவர் 4 முறை தேசிய சாம்பியனாகவும் 3 முறை உலக சாம்பியனாகவும் இருந்துள்ளார். டியானி பத்தாண்டுகளுக்கு நம்.1 வீரராக இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த முறைக்கேட்டினால் இந்த விளையாட்டின் மீதிருக்கும் உண்மைத்தன்மைக்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து