முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உத்தரகாண்ட் மாநிலத்தில் சோகம்: குளிருக்கு மூட்டிய நெருப்பில் கணவன்- மனைவி உயிரிழப்பு

சனிக்கிழமை, 18 ஜனவரி 2025      இந்தியா
Theee 2025-01-17

Source: provided

டேராடூன் : குளிருக்கு மூட்டிய நெருப்பில் மூச்சுத்திணறி கணவன்- மனைவி இருவரும் உயிரிழந்து உள்ளனர்.

உத்தரகாண்ட் மாநிலத்தில் குளிருக்காக மூட்டிய நெருப்பால் மூச்சுத்திணறி தம்பதி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசு இடைநிலைக் கல்லூரியில் எழுத்தராக பணிபுரிபவர் மதன் மோகன் செம்வால் (52 வயது). அவரது மனைவி யசோதா தேவி (48 வயது). இருவரும் பிலங்கானா பகுதியில் உள்ள துவாரி தப்லா கிராமத்தில் நடைபெற்ற திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக வந்துள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 3 தினங்களுக்கு முன்பு இரவு 11 மணியளவில் கடும் குளிர் காரணமாக குளிர்காய்வதற்காக நெருப்பை மூட்டி அதனை அறைக்குள் வைத்து கதவை பூட்டி தூங்கியுள்ளனர். இந்த நிலையில் நெருப்பில் இருந்து வெளியேறிய புகையால் தூக்கத்திலேயே இருவரும் மூச்சுத்திணறி உயிரிழந்தனர். நேற்றுமுன்தினம் காலையில் அவர்களது மகன் அவர்களை எழுப்ப கதவை தட்டும் போது உள்ளிருந்து எந்த பதிலும் வரவில்லை.

இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்துச் சென்று பார்த்தனர். அப்போது தம்பதி படுக்கையில் இறந்து கிடந்தனர். இதையடுத்து தம்பதியின் உடலை உள்ளூர் மக்கள் போலீசாருக்கு தெரிவிக்காமல் தகனம் செய்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து