முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

13 ஆண்டுகளுக்குப் பின்னர் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கொல்கத்தா முதல் முறையாக வெற்றி

சனிக்கிழமை, 12 ஏப்ரல் 2025      விளையாட்டு
CSK 11-04-2025

Source: provided

சென்னை : கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி தோல்வியைத் தழுவியது.

சேப்பாக்கம் திடலில்... 

ஐ.பி.எல். தொடரில் சென்னை சேப்பாக்கம் திடலில் நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்ய, சி.எஸ்.கே. முதலில் விளையாடியது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ரச்சின் ரவீந்திரா மற்றும் டெவான் கான்வே இருவரும் களமிறங்கினர். டெவான் கான்வே 12 ரன்களிலும், ரச்சின் ரவீந்திரா 4 ரன்களிலும் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர். அதன் பின், ராகுல் திரிபாதி மற்றும் விஜய் சங்கர் இருவரும் ஜோடி சேர்ந்தனர்.

மீண்டும் கேப்டனாக... 

இந்த இணை நீண்ட நேரம் நீடிக்கவில்லை. ராகுல் திரிபாதி 16 ரன்களில் ஆட்டமிழந்தார். விஜய் சங்கர் 21 பந்துகளில் 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன் பின், களமிறங்கிய வீரர்களில் ரவிச்சந்திரன் அஸ்வின் 1 ரன், ரவீந்திர ஜடேஜா மற்றும் தீபக் ஹூடா இருவரும் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். இந்த  போட்டியில் மீண்டும் கேப்டனாக களமிறங்கிய எம்.எஸ்.தோனி 1 ரன்னில் சுனில் நரைன் பந்துவீச்சில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். நிதானமாக விளையாடிய ஷிவம் துபே 29 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 3 பவுண்டரிகள் அடங்கும்.

103 ரன்கள்... 

இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் 9 விக்கெட்டுகளை இழந்து 103 ரன்கள் எடுத்தது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய சுனில் நரைன் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். வருண் சக்கரவர்த்தி மற்றும் ஹர்ஷித் ராணா தலா இரண்டு விக்கெட்டுகளையும், மொயின் அலி மற்றும் வைபவ் அரோரா தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

விரைவாக முடிக்க... 

104 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர் எந்தவித தயக்கமுமின்றி ஆட்டத்தை விரைவாக முடிக்க முனைப்பு காட்டினர். குயிண்டன் டிகாக் - சுனில் நரைன் இருவரும் இணைந்து சென்னை பந்து வீச்சை சிதறடித்தனர். சுனில் நரைன் 44 ரன்களும்(2பவுண்டரி, 5 சிக்ஸர்), டிகாக் 23 ரன்களும்(3 சிக்ஸர்) எடுத்து ஆட்டமிழந்தனர். அவரகளுக்குப் பின்னர் வந்த ரஹானே - ரிங்கு சிங் இருவரும் இணைந்து கொல்கத்தா அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர்.

அபார வெற்றி...

முடிவில், 10.1 ஓவர்களில் கொல்கத்தா அணி 2 விக்கெட் இழப்புக்கு 107 ரன்கள் எடுத்து அபார வெற்றிபெற்றது. இதன் மூலம் கொல்கத்தா அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சென்னை தரப்பில் கம்போஜ், நூர் அகமது தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

13 ஆண்டுகளுக்குப் பிறகு...

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கொல்கத்தா அணி 13 ஆண்டுகளுக்குப் பின்னர் முதல் முறையாக வெற்றி பெற்றுள்ளது. அதுமட்டுமின்றி சென்னை அணி தொடர்ச்சியாக 5 வது தோல்வியும், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடர்ச்சியாக 3-வது தோல்வியாக அமைந்தது. நடப்பு ஐ.பி.எல். தொடரில் 6 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி 5 போட்டிகளில் தோல்வியடைந்து புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது. கொல்கத்தா அணி 3 வெற்றிகளுடன் மூன்றாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து