முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆண்டர்சனுக்கு இங்கி. அரசின் உயரிய விருது

சனிக்கிழமை, 12 ஏப்ரல் 2025      விளையாட்டு
Jems-Andrsan 11-04-2025

Source: provided

லண்டன் : இங்கிலாந்தின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு அந்நாட்டின் மிக உயரிய விருது (கே.பி.இ) அறிவிக்கப்பட்டுள்ளது.

நைட்வுட் விருது...

ஆர்டர் ஆப் தி பிரிட்டிஷ் எம்பயர் எனப்படும் விருதில் கே.பி.இ. என்பது நைட்வுட் என்ற விருதாகும். இங்கிலாந்து அரசு வழங்கும் விருதுகளில் கே.பி.இ. உயர்ந்த வரிசையில் இருக்கிறது. கடந்த ஜூலையில் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 42 வயதாகும் ஜேம்ஸ் ஆண்டர்சன் டெஸ்ட்டில் 709 விக்கெட்டுகளை எடுத்து அசத்தியுள்ளார்.

ஜேம்ஸ் ஆண்டர்சன்... 

இங்கிலாந்தில் அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார். உலக அளவில் முரளிதரன் 800 விக்கெட்டுகளுடன் முதலிடத்திலும் ஷேன் வார்னே 708 விக்கெட்டுகளுடன் 2ஆவது இடத்திலும் இருப்பது கவனிக்கத்தக்கது. கிரிக்கெட்டில் ஆற்றிய பங்களிப்புக்காக இந்த விருது வழங்கப்படுவதாக இங்கிலாந்து அரசு அறிவித்துள்ளது.

லங்காஷயர் அணிக்காக... 

ஆண்டர்சன் தற்போது முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் லங்காஷயர் அணிக்காக விளையாடி வருகிறார். இதற்கு முன்பாக முன்னாள் இங்கிலாந்து வீரர் மொயின் அலிக்கு ஓ.பி.இ. விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து