முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக சட்டசபை இன்று கூடுகிறது: கவர்னர் பன்வாரிலால் உரையாற்றுகிறார்

திங்கட்கிழமை, 1 பெப்ரவரி 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தமிழக சட்டசபை கூட்டம் இன்று காலை 11 மணிக்கு கூடுகிறது. இந்த கூட்டத்தில் கவர்னர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றுகிறார்.

ஆண்டுதோறும் சட்ட சபையின் முதல் கூட்டம் ஜனவரி மாதம் கவர்னர் உரையுடன் தொடங்கும். இந்த வருடம் தாமதமாக பிப்ரவரி மாதம் நடக்கிறது. இந்த ஆண்டின் தமிழக சட்டசபை முதல் கூட்டம் இன்று (2-ம் தேதி) தொடங்குகிறது. கொரோனா காரணமாக இந்த கூட்டம் சட்டமன்ற கூடத்தில் நடைபெறுவதற்குப் பதிலாக கலைவாணர் அரங்கின் 3-வது மாடியில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெறுகிறது. கடந்த ஆண்டு நடந்த மழைகால சட்டமன்ற கூட்டத்தொடர் கொரோனா பரவல் காரணமாக இங்கு நடத்தப்பட்டது. இந்த வருட முதல் கூட்டத் தொடரும் கலைவாணர் அரங்கில் அதே இடத்தில் நடத்தப்படுகிறது.

கூட்டத்தில் பங்கேற்க வரும் அனைத்து எம்.எல்.ஏ.க் கள், கூட்டமன்ற செயல் அதிகாரிகள், செய்தி சேகரிக்கும் ஊடகத்தினர் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. எம்.எல்.ஏ.க்கள் தங்கள் ஊரில் 72 மணி நேரத்துக்கு முன்பு எடுத்த கொரோனா பரிசோதனை முடிவை கொண்டு வரலாம். அல்லது எம்.எல்.ஏ.க்கள் விடுதியில் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

கலைவாணர் அரங்கில் சட்டசபை கூட்டம் நடைபெறுவதையொட்டி சபாநாயகர் தனபால், சட்டமன்ற செயலாளர் சீனிவாசன் மற்றும் அதிகாரிகள் அங்கு சென்று ஆய்வு செய்தனர். இதையடுத்து சட்டசபை கூட்டத்துக்கான அனைத்து முன் ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இன்று நடைபெறும் சட்டமன்ற கூட்டத்தில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் காலை 11 மணிக்கு உரையாற்றுகிறார். முன்னதாக கலைவாணர் அரங்குக்கு வரும் அவரை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர்  ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் வரவேற்கின்றனர். தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி  கவர்னர் உரையில் அரசின் முக்கிய திட்டங்களுக்கான அறிவிப்புகள் இடம்பெறும். பல்வேறு புதிய திட்டங்களுக்கான முன் அறிவிப்புகளும் இடம் பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கவர்னர் ஆங்கிலத்தில் உரையாற்றுகிறார். அதன் மொழி பெயர்ப்பை சபாநாயகர் தனபால் தமிழில் வாசிப்பார். இத்துடன் முதல் நாள் கூட்டம் நிறைவுபெறும். அமைச்சர் துரைக்கண்ணு சமீபத்தில் மரணமடைந்தார். அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் 3-ம் தேதி ஒருநாள் சட்ட சபை கூட்டம் ஒத்தி வைக்கப்படலாம். இதுபற்றிய முடிவை சபாநாயகர் அறிவிப்பார்.

தொடர்ந்து நடைபெறும் சட்டசபை கூட்டத்தில் கார சார விவாதங்கள் இடம் பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது நடைபெற்று வரும் தேர்தல் பிரசார கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள். இது சட்டசபையிலும் எதிரொலிக் கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக எதிர்க் கட்சிகள் கருத்து தெரிவித்து வருகின்றன. இந்த சட்டங்களுக்கு எதிராக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் கூறி வருகிறார்கள். எனவே, இந்த சட்டமன்ற கூட்டத் தொடரில் இதை எதிர்க்கட்சிகள் வற்புறுத்தும் என்று தெரிகிறது. இன்று சட்டசபை கூட்டம் முடிந்த பிறகு சபாநாயகர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வு குழு கூட்டம் நடைபெறுகிறது.

இதில் இந்த கூட்டத்தொடர் எத்தனை நாள் நடைபெறும் என்பது முடிவு செய்யப்படும்.  இந்த கூட்டத்தொடரில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெறும்.  புதிய சட்ட மசோதாக்களும் தாக்கல் செய்யப்பட வாய்ப்பு உள்ளது. இந்று தொடங்கும் சட்டசபை முதல் கூட்டத்தொடர் 2 அல்லது 3 நாட்கள் நடை பெறலாம் என்று தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து