முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வரை தொந்தரவு செய்யக்கூடாது என்று வழக்குத்தொடர்ந்தவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்

திங்கட்கிழமை, 7 ஜூன் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : கொரோனா இரண்டாவது அலை பரவத்தொடங்கிய நேரத்தில் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு மாநிலத்தின் புதிய முதல்-அமைச்சராக பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலின் ஓய்வில்லாமல் பணியாற்றி வருவதாக கூறி சென்னை அண்ணாநகரை சேர்ந்த வழக்கறிஞர் விவேகானந்தர் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார்.

அவர் தனது மனுவில், முதல்-அமைச்சரின் உடல்நலத்தில் அனைவருக்கும் அக்கறை உள்ளது என்றும் தொடர்ச்சியாக அவர் பல்வேறு ஆய்வுக்கூட்டங்கள் நடத்துவது, மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வது என்று ஓய்வில்லாமல் உழைத்து வருவதாகவும், இவ்வாறு ஓய்வில்லாமல் பணியாற்றிய குஜராத் மாநில முதல்மந்திரி விஜய் ரூபானி மயக்கம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதையும் மனுதாரர் தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார். 

முதல்-அமைச்சர் ஓய்வு எடுப்பது அவசியம் என்று கூறியுள்ள மனுதாரர், அசாதாரண சூழ்நிலைகள் தவிர ஞாயிற்றுக்கிழமைகளில் முதல்-மந்திரிக்கு எந்த கோப்பையும் அனுப்புவது அல்லது அவரின் உத்தரவை கோருவது என தொந்தரவு செய்யக்கூடாது என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார். 

இந்த வழக்கை நேற்று விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, முதல்-அமைச்சரும் அதிகாரிகளும் எப்படி செயல்பட வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவு பிறப்பிக்க முடியாது என கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். 

மேலும், மனுதாரருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து அந்த அபராதத்தொகையை முதல்-அமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்க வேண்டும் என்றும் அதை கொரோனா நிவாரணத்திற்காக பயன்படுத்த வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

இதுமட்டுமல்லாமல், அடுத்த ஓராண்டிற்கு இந்த மனுதாரர் பொதுநல வழக்குகள் தாக்கல் செய்யவும் தடை விதித்து தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து