முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வடகொரிய அதிபருக்கு புடின் பரிசளித்த காரில் தென் கொரிய உதிரி பாகங்கள்

சனிக்கிழமை, 29 ஜூன் 2024      உலகம்
Putin-Kim 2024-06-29

Source: provided

பியாங்கியாங் : வடகொரிய அதிபருக்கு புடின் பரிசளித்த காரில் தென்கொரிய நிறுவனத்தின் உதிரிபாகங்கள் இருப்பது தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது. 

24 ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த 19-ம் தேதி இரண்டாவது முறையாக ரஷ்ய அதிபர் புடின் வடகொரியாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார்.  வடகொரிய தலைங்கர் பியங்காங்கில்  கிம் ஜாங் உன்-ஐ சந்தித்து  அவருக்கு ரஷ்ய தயாரிப்பான அவுரஸ் லிமவுசைன் என்ற சொகுசு காரை புடின் பரிசளித்தார். 

மேலும் இருவரும் அந்த காரில் சிறிது தூரம் பயணம் மேற்கொண்டனர். கிம் ஜாங் உன் அருகில் அமர்ந்திருக்க புடின் சொகுசு காரை ஓட்டிக்காட்டினார். பின்னர் கிம் ஜாங் உன் காரை ஆர்வமாக ஓட்டிப்பார்த்தார். இந்த  வீடியோ இணையதளத்தில்  பரவி வருகிறது.   

இந்நிலையில் புடின் பரிசளித்த  அவுரஸ் லிமவுசைன் கார் குறித்த சர்ச்சைக்குரிய உண்மை ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதாவது,  அவுரஸ் லிமவுசைன் கார்களை அவுரஸ் மோட்டார்ஸ் என்ற  ரஷ்ய நிறுவனம் தயாரித்து வரும் நிலையில் கார் தயாரிப்பிற்கான உதிரி பாகங்களை அந்நிறுவனம் தென்கொரியா, சீனா, இந்தியா, துருக்கி, இத்தாலி என பல்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதாக ரியூட்டர்ஸ் நிறுவனம் கண்டறிந்துள்ளது.  

வடகொரியாவும் தென் கொரியாவும் பரம எதிரிகளாக இருந்து வரும் நிலையில் வடகொரிய அதிபருக்கு தென்கொரிய உதிரி பாகங்களை கொண்ட காரை புடின் பரிசளித்திருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 days 22 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 days 23 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 6 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 6 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து