முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆகஸ்ட் மாதத்தில் வங்கிகளுக்கு மொத்தம் 13 நாட்கள் விடுமுறை

செவ்வாய்க்கிழமை, 30 ஜூலை 2024      இந்தியா
Bank 2023 08 08

புதுடெல்லி, ஆகஸ்ட் மாதத்தில் வங்கிகளுக்கு 13 நாட்கள் விடுமுறை விடப்படவுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் வங்கி விடுமுறை நாட்களை ரிசர்வ் வங்கி வெளியிட்டு வருகிறது. அவ்வகையில் ஆகஸ்ட் மாதத்துக்கான வங்கி விடுமுறை நாட்களை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதன்படி, ஆகஸ்ட் மாதத்தில் 13 நாட்கள் வங்கிகள் மூடப்படுகின்றன. வழக்கமாக இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகள், அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளில் வங்கிகளுக்கு விடுமுறை. அத்துடன், பொது விடுமுறை நாட்களிலும் வங்கிகள் மூடப்படும். மாநிலங்களை பொருத்து விடுமுறை நாட்கள் மாறுபடும்.

ஆகஸ்ட் 2024-க்கான தேசிய மற்றும் மாநில அளவிலான விடுமுறை நாட்கள் வருமாறு:-

ஆகஸ்ட் 3- கேர் பூஜை (அகர்தலாவில் வங்கிகளுக்கு விடுமுறை), ஆகஸ்ட் 4- ஞாயிறு விடுமுறை, ஆகஸ்ட் 8- டெண்டாங் லோ ரம் பாத் (சிக்கிம் மாநிலம் காங்டாக்கில் வங்கிகளுக்கு விடுமுறை), ஆகஸ்ட் 10 - இரண்டாவது சனிக்கிழமை விடுமுறை, ஆகஸ்ட் 11- ஞாயிறு விடுமுறை, ஆகஸ்ட் 13- தேசபக்தர் தினம் (இம்பாலில் வங்கிகளுக்கு விடுமுறை), ஆகஸ்ட் 15- சுதந்திர தினம், ஆகஸ்ட் 18- ஞாயிறு விடுமுறை, ஆகஸ்ட் 19- ரக்சா பந்தன் (திரிபுரா, குஜராத், ஒடிசா, உத்தரகாண்ட், ராஜஸ்தான், உத்தர பிரதேசம் மற்றும் இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வங்கிகளுக்கு விடுமுறை, ஆகஸ்ட் 20- ஸ்ரீ நாராயண குரு ஜெயந்தி (கொச்சியில் வங்கிகளுக்கு விடுமுறை), ஆகஸ்ட் 24- நான்காவது சனிக்கிழமை விடுமுறை, ஆகஸ்ட் 25- ஞாயிறு விடுமுறை,  ஆகஸ்ட் 26- கிருஷ்ண ஜெயந்தி (குஜராத், ஒடிசா, சண்டிகர், தமிழ்நாடு, உத்தரகாண்ட், சிக்கிம், ஆந்திர பிரதேசம், தெலுங்கானா, ராஜஸ்தான், ஜம்மு, உத்தர பிரதேசம், மேற்கு வங்காளம், பீகார், சத்தீஸ்கர், ஜார்கண்ட், மேகாலயா, இமாச்சலப் பிரதேசம் மற்றும் ஸ்ரீநகரில் வங்கிகளுக்கு விடுமுறை) என அறிவிக்ப்பட்டுள்ளது.

வங்கிகளுக்கு சென்று முக்கியமான பரிவர்த்தனை மேற்கொள்பவர்கள், இந்த விடுமுறை நாட்களை கருத்தில் கொண்டு அதற்கேற்ப முன்கூட்டியே திட்டமிட்டுவது அவசியமாகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து