முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவை தோல்வியடைந்த நாடு என கூறியவர் டொனால்டு டிரம்ப் : ஜனநாயக கட்சி மாநாட்டில் பைடன் பேச்சு

செவ்வாய்க்கிழமை, 20 ஆகஸ்ட் 2024      உலகம்
Joe-Biden 2024-08-20

Source: provided

நியூயார்க் : தோல்வியடைந்த நாடு என அமெரிக்காவை டிரம்ப் கூறினார் என்று ஜனநாயக கட்சி மாநாட்டில் அதிபர் ஜோபைடன் குற்றஞ்சாட்டி பேசினார். 

அமெரிக்காவின் சிகாகோ நகரில் ஜனநாயக கட்சியின் 4 நாள் மாநாடு தொடங்கி நடந்து வருகிறது.  இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான ஜனநாயக கட்சியின் அதிகாரப்பூர்வ அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் முறைப்படி அறிவிக்கப்படுகிறார்.  இதே போன்று, துணை அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ள மின்னசோட்டா கவர்னர் டிம் வால்சும் முறைப்படி வேட்பாளராக இந்த மாநாட்டில் அறிவிக்கப்படுவார்.

அமெரிக்க அதிபர் போட்டியில் இருந்து கடந்த மாதம் விலகிய அதிபர் ஜோ பைடன்  இந்த மாநாட்டில் பேச வந்ததும், கூட்டத்தினர் அவரை வரவேற்கும் வகையில் உங்களை நேசிக்கிறோம் என கோஷம் எழுப்பினர். அப்போது பைடன், அமெரிக்காவை நான் நேசிக்கிறேன் என்று அழுதபடி கூறினார்.  தொடர்ந்து அவர் பேசும் போது, 

அமெரிக்க அதிபராக அரசியலமைப்பை பாதுகாப்பதற்காக, உங்களிடமும், கடவுளிடமும் நான் உறுதிமொழி ஒன்றை எடுத்து கொண்டேன். 2020-ம் ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் தோல்வியடைந்த போது, அவருடைய ஆதரவாளர்கள் கேபிட்டல் கட்டிடம் மீது கும்பலாக சென்று தாக்குதல் நடத்தினர். 

அமெரிக்காவில் அரசியல் வன்முறைக்கு இடமில்லை.   வளர்ச்சியானது அடைய கூடிய ஒன்று என நான் நம்புகிறேன்.  நம்முடைய நல்ல நாட்கள் நமக்கு பின்னால் இல்லை.  நம் முன்னேயே உள்ளன.  ஜனநாயகம் வெற்றி பெற்றுள்ளது.  ஜனநாயகம் வழங்கப்பட்டு உள்ளது.  அந்த ஜனநாயகம் இனி பாதுகாக்கப்பட வேண்டும். 

தோல்வியடைந்த நாடு என அமெரிக்காவை டிரம்ப் பொதுவெளியில் கூறினார்.    உலகத்திற்கு அவர் அனுப்பிய செய்தியை நினைத்து பாருங்கள்.  அவர் தோல்வி அடைந்தவர் என்று தெரிவித்துள்ளார். 

அமெரிக்காவில் விபத்து, வியாதிகளை விட துப்பாக்கி சூட்டால் உயிரிழப்பவர்கள் அதிகரித்தனர்.  30 ஆண்டுகளில் முதன்முறையாக இரு அரசியல் கட்சிகள் ஏற்று கொண்ட துப்பாக்கி பாதுகாப்பு சட்டம் ஒன்றை கொண்டு வந்ததில் நானும், கமலாவும் பெருமை கொள்கிறோம். இவ்வாறு ஜோபைடன் தெரிவித்தார்.   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 2 days ago
View all comments

வாசகர் கருத்து