முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போர்ப்ஸ் வெளியிட்டஉலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் இந்தியர்கள் 200 பேர் இடம்பிடிப்பு

வெள்ளிக்கிழமை, 30 ஆகஸ்ட் 2024      உலகம்
Forbes-2024-08-30

வாஷிங்டன், போர்ப்ஸ் வெளியிட்டுள்ள உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் சுமார் 200 இந்தியர்கள் இடம்பிடித்துள்ளனர். இந்திய கோடீஸ்வரர்களில் முகேஷ் அம்பானி முதலிடத்தில் உள்ளார். 

அமெரிக்க ஊடக நிறுவனமான போர்ப்ஸ் (Forbes) இணையதளத்தில் உலக கோடீஸ்வரர்கள் தொடர்பான நிகழ்நேர பட்டியலில் சுமார் 200 இந்தியர்கள் இடம்பிடித்துள்ளனர். இன்றைய நிலவரப்படி இந்திய கோடீஸ்வரர்களில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனர் முகேஷ் அம்பானி முதலிடத்தில் உள்ளார். இவர் உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் 12-வது இடத்தில் இருக்கிறார். இவரது சொத்து மதிப்பு 118 பில்லியன் டாலர் ஆகும்.

இந்திய பட்டியலில் கவுதம் அதானி (அதானி குரூப்) இரண்டாவது இடத்திலும், சாவித்ரி ஜிண்டால் மற்றும் குடும்பத்தினர் (ஜே.எஸ்.டபுள்யூ குரூப்) மூன்றாவது இடத்திலும் உள்ளனர். எச்.சி.எல். டெக்னாலஜிஸ் நிறுவனர் ஷிவ் நாடார் (வயது 79) நான்காவது இடத்தில் உள்ளார். இவரது சொத்து மதிப்பு 38.4 பில்லியன் டாலர் (ரூ.3.21 லட்சம் கோடி) ஆகும்.

அவரைத் தொடர்ந்து இயக்குனர் திலிப் சங்வி (சன் பார்மா), சைரஸ் பூனவல்லா (சீரம் இன்ஸ்டிடியூட்), குமார் பிர்லா (ஆதித்யா பிர்லா குழுமம்), ராதாகிருஷ்ணன் தமானி (அவன்யூ சூப்பர்மார்க்கெட்டுகள், குஷால் பால் சிங் (டி.எ.எப். லிமிடெட்), ரவி ஜெய்புரா (வருண் பெவரேஜஸ்) ஆகியோர் டாப்-10 பட்டியலில் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து