முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஷ்யாவின் டிரோன் தாக்குதலை முறியடித்த உக்ரைன் பெண்கள் படை

சனிக்கிழமை, 31 ஆகஸ்ட் 2024      உலகம்
Ukrainian-Women 2024-08-31

கீவ், ரஷ்யாவின் டிரோன் தாக்குதலை உக்ரைனின் பெண்கள் படையினர் முறியடித்ததாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது. 

ரஷ்யா - உக்ரைன் போர் பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அண்மையில் உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்ய ராணுவம் டிரோன் தாக்குதலை  நடத்தியது. இந்த டிரோன்களை தங்களின் ராணுவம் தாக்கி அழித்ததாக உக்ரைன் தெரிவித்திருந்தது. 

இந்த தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ரஷ்யாவின் சராதோவ் பகுதியில் உக்ரைன் டிரோன்களை ஏவி சரமாரியாகத் தாக்குதல் நடத்தியது. உக்ரைனின் 20 டிரோன்களை தாக்கி அழித்துள்ளதாக ரஷ்ய ராணுவம் தெரிவித்தது. 

டிரோன் விழுந்து சராதோவ் பகுதியில் உள்ள 38 மாடி குடியிருப்பு கட்டிடம் தீப்பற்றி எரிந்தது. உக்ரைன் பகுதிகள் மீது ரஷ்யா விடாமல் வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது. ராட்சத மிசைல்கள் மற்றும் டிரோன்களை உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கு உக்ரைன் பகுதிகள் மீது தாக்குதல்கள் நடந்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ரஷ்யாவின் டிரோன் தாக்குதலை முறியடிக்க உக்ரைன் பெண்கள் போர்க்களத்திற்கு வந்துள்ளனர். இந்த பெண்கள் குழு ரஷ்யாவின் டிரோன்களை சுட்டு வீழ்த்தியுள்ளனர். ரஷ்யாவின் தாக்குதலை சமாளிக்க ஒவ்வொரு மாதமும் 10 ஆயிரம் உக்ரைன் ஆண்கள் ராணுவத்தில் சேர்க்கப்படுகின்றனர். அவர்கள் உக்ரைன் எல்லையை பாதுகாத்து வருகின்றனர். 

ஆண்களோடு கைகோர்த்து தற்போது பெண்களும் நாட்டை பாதுகாக்க முன்வந்துள்ளனர். ரஷ்யாவின் டிரோன் தாக்குதலை முறியடிக்க முதற்கட்டமாக 70 பெண்கள் பாதுகாப்புப் படையில் சேர்ந்துள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து