முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லியில் நீதித்துறைக்கான இரண்டு நாள் தேசிய மாநாடு : பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

சனிக்கிழமை, 31 ஆகஸ்ட் 2024      இந்தியா
Modi 2023 07 30

Source: provided

புதுடெல்லி : டெல்லியில் நீதித்துறைக்கான தேசிய மாநாடு இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. இந்த மாநாட்டை நேற்று  பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.

சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சந்திரசூட், கபில் சிபல் உள்ளிட்டோர் பங்கேற்ற இந்த மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது,

நீதிமன்றங்கள் தேச நலனுக்காக செயல்பட்டு வருகிறது. நீதித்துறை மற்றும் சுப்ரீம் கோர்ட் மீது மக்கள் அதிக நம்பிக்கை வைத்துள்ளனர். இந்தியர்கள் ஒருபோதும் நீதித்துறை மீதோ, நீதிமன்றங்கள் மீதோ சந்தேகம் எழுப்பியதில்லை.

சுப்ரீம் கோர்ட்டின் 75 ஆண்டுகள் என்பது ஒரு நிறுவனத்தின் பயணம் அல்ல. இந்திய அரசியலமைப்பு மற்றும் மதிப்பின் பயணம். சுப்ரீம் கோர்ட் ஜனநாயகத்தின் தாய். இந்தியாவின் பெருமையை மேலும் உயர்த்துகிறது. நெருக்கடி நிலையின் இருண்ட காலத்திலும் உச்ச நீதிமன்றம் எங்கள் அடிப்படை உரிமைகளை உறுதி செய்தது.

எப்போதும் தேசிய ஒருமைப்பாட்டைப் பாதுகாத்தது. நீதித்துறையில் மாவட்ட நீதித்துறை என்பது முக்கியமான தூணாக விளங்குகிறது. நமது குற்றவியல் சட்டங்கள் காலனித்துவ சிந்தனையிலிருந்து விடுவிக்க வழிவகை செய்தது. புதிய சட்டங்கள் மக்களுக்கு மிகுந்த பாதுகாப்பு அளிக்கும்.

மாவட்ட நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள 4.5 கோடி வழக்குகளை தீர்க்க வழிவகை ஆராயப்படுகிறது. 10 ஆண்டுகளில் நீதித்துறையின் உள்கட்டமைப்பை மேம்படுத்த அரசு ரூ. 8 ஆயிரம் கோடி செலவிட்டுள்ளது. புதிய கிரிமினல் சட்டங்கள் குடிமக்கள், நீதித்துறைக்கு முன்னுரிமை தரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

பெண்கள், குழந்தைகளை மையமாக கொண்டு புதிய சட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் சமூகத்திற்கு மிகவும் கவலை அளிப்பவையாக உள்ளன. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து