முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆலந்தூரில் இன்று உலக உறுப்புதான விழிப்புணர்வு மாரத்தான் போட்டி : அமைச்சர் தா.மோ.அன்பரசன் துவக்கி வைக்கிறார்

சனிக்கிழமை, 31 ஆகஸ்ட் 2024      தமிழகம்
Anbarasan 1

Source: provided

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் ஆலந்தூரில் உலக உறுப்புதான விழிப்புணர்வு மாரத்தான் போட்டியை இன்று அமைச்சர் தா.மோ. அன்பரசன் துவக்கி வைக்கிறார். 

காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. மருத்துவர் அணி சார்பில், உலக தாய்ப்பால் வாரம் மற்றும் உலக உடல் உறுப்பு தான தினத்தை முன்னிட்டு, ஆலந்தூர் நீதிமன்றம் அருகே இன்று அதிகாலை 5.30 மணியளவில் பிரமாண்ட விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெறுகிறது. 

இந்த போட்டியை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கொடியசைத்து துவக்கி வைத்து, வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகள் வழங்குகிறார். இதில் சிறப்பு விருந்தினர்களாக தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி., அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, மருத்துவர் அணி தலைவர் கனிமொழி, என்.வி.என்.சோமு எம்.பி., செயலாளர் எழிலன் நாகநாதன் எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்து கொள்கின்றனர். 

முன்னதாக, விழிப்புணர்வு மாரத்தான் போட்டிக்கான டி-ஷர்ட்டுகளை மாவட்ட தி.மு.க. மருத்துவர் அணியினர் அறிமுகப்படுத்தி வைத்தனர். இதற்கான ஏற்பாடுகளை காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட மருத்துவர் அணி, இளைஞரணி, மாணவரணி நிர்வாகிகள் சிறப்பாக மேற்கொண்டு வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து