முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி:பாகிஸ்தானையும் வீழ்த்தியது இந்தியா

சனிக்கிழமை, 14 செப்டம்பர் 2024      விளையாட்டு
14-Ram-50-copy

Source: provided

பெய்ஜிங்: ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி அரையிறுதிக்குள் நுழைந்தது.

ஹர்மன்பிரீத்.... 

இந்தியா தனது கடைசி லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானை இன்று எதிர்கொண்டது. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. 2 கோல்களையும் இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் அடித்து அசத்தினார்.  இரு அணிகளும் ஏற்கெனவே அரையிறுதிக்குத் தகுதிபெற்றுவிட்டது என்றாலும், இந்தியா - பாகிஸ்தான் மோதல் எப்போதும் போல் இரு அணிகளின் ரசிகா்கள் கண்களுக்கு நல்ல விருந்தாக அமைந்தது.

5 ஆட்டங்களிலும்...

போட்டியில் இதுவரை விளையாடிய 4 ஆட்டங்களிலுமே வெற்றி கண்ட ஒரே அணியாக இருக்கும் நடப்பு சாம்பியன் இந்தியா, தற்போது பாகிஸ்தானையும் வீழ்த்தி தோல்வியே காணாமல் லீக் சுற்றை நிறைவு செய்துள்ளது. ஒலிம்பிக்கில் அடுத்தடுத்து இரு வெண்கலப் பதக்கங்கள் வென்றுள்ள இந்தியா, 2023 ஆசிய விளையாட்டுப் போட்டிகள், ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை, 2022 ஆசிய கோப்பை என பாகிஸ்தானுடனான முந்தைய ஆட்டங்களில் வெற்றியை பதிவு செய்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து