முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய விமானப்படை தலைமை தளபதியாக ஏர் மார்ஷல் அமர் ப்ரீத் சிங் நியமனம்

சனிக்கிழமை, 21 செப்டம்பர் 2024      இந்தியா
Amar-Preet-Singh 2024-03-21

Source: provided

புதுடெல்லி : இந்திய விமானப்படை தளபதியாக ஏர் மார்ஷல் அமர் பிரீத் சிங் நியமிக்கப்பட்டு உள்ளார். இவர் வரும் 30-ம் தேதி அன்று பொறுப்பு ஏற்க உள்ளார்.

தற்போது விமானப்படை தளபதியாக இருக்கும் ஏர் மார்ஷன் விவேக் ராம் சவுத்ரி வரும் 30-ம் தேதி அன்று ஓய்வு பெற உள்ளார். இதனையடுத்து காலியாகும் அந்த பதவிக்கு தான் அமர் பிரீத் சிங் நியமிக்கப்பட்டு உள்ளார். தற்போது இவர், விமானப் படையின் துணைத்தளபதியாக உள்ளார். கடந்தாண்டு பிப்ரவரி 1-ம் தேதி முதல் இப்பதவியில் உள்ளார். 

1984-ல் விமானப்படையில் இணைந்த இவர், தேசிய பாதுகாப்பு அகாடமி, குன்னூரின் வெல்லிங்டன்னில் உள்ள ராணுவ பயிற்சி கல்லூரி, தேசிய பாதுகாப்பு கல்லூரி ஆகியவற்றில் முக்கிய பதவிகளை இவர் வகித்து உள்ளார். 

மிக் 27 போர் விமானங்களின் கமாண்டிங் அதிகாரியாகவும் பணியாற்றி உள்ளார்.  சிறப்பாக பணியாற்றியதற்காக 2019-ல் அதி விஷிஷ்த் சேவை பதக்கம் மற்றும் 2023-ம் ஆண்டில் பரம் விஷிஷ்த் சேவை பதக்கத்தையும் பெற்றுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து