முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராகுலுக்கு எதிரான வெறுப்புப்பேச்சு : மல்லிகார்ஜூன கார்கே கண்டனம்

சனிக்கிழமை, 21 செப்டம்பர் 2024      இந்தியா
Mallikarjuna-Karke 2023 02

Source: provided

ஜம்மு- காஷ்மீர் : ராகுலுக்கு எதிரான வெறுப்புப்பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள மல்லிகார்ஜூன கார்கே ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க.வுக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம் நடத்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஜம்முவில் நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய கார்கே, "ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க.வின் "நச்சு மனப்பான்மைக்கு" பயப்பட மாட்டோம். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் காந்தியை தரக்குறைவாகப் பேசிய பா.ஜ.க. தலைவர்கள் மீது பிரதமர் நரேந்திர மோடி நடவடிக்கை எடுக்கத் தவறி விட்டார். ஏனெனில் மோடி அவர்களுக்கு பயப்படுகிறார்.

எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் உள்ளிட்ட பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் எங்கள் தலைவர்களின் நாக்கை அறுப்பதாகப் பேசுகிறார்கள். உண்மையைப் பேசியதற்காக ராகுல் காந்தி மீது தரக்குறைவான விமர்சனங்கள் மற்றும் அவர் மீது வெறுப்புச் சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. காங்கிரசை யாராவது பயமுறுத்த முயன்றால் நாங்கள் பயப்பட மாட்டோம், நம்மை பயமுறுத்துபவர்கள் சுதந்திரப் போராட்டத்தின் போது வீட்டில் அமர்ந்து இருந்தார்கள், நம் மக்கள் போராடி உயிரைக் கொடுத்தார்கள், காந்தி குடும்பத்திற்கு தியாக வரலாறு உண்டு. உங்கள் பங்களிப்பு என்ன என்பதை மக்களுக்குச் சொல்லுங்கள்.

மகாத்மா காந்தி, இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தி ஆகியோர் தேசத்திற்காக உயிரைக் கொடுத்தவர்கள் என்றும், ராகுலை பயங்கரவாதி மற்றும் தேசவிரோதி என்றும் அவர்கள் (ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க.) கூறுகிறார்கள். அவர்கள் எங்கள் தலைவர்களின் நாக்கை வெட்டுவது பற்றி பேசுகிறார்கள். இதை நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம், இதற்கு எதிராக போராட்டம் நடத்துவோம்" என்று கார்கே கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து