முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உஸ்பெகிஸ்தானுடன் இந்தியா டிரா

சனிக்கிழமை, 21 செப்டம்பர் 2024      விளையாட்டு
Chess 2023-10-15

Source: provided

ஹங்கேரி தலைநகா் புடாபெஸ்டில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 193 அணிகள் பங்கேற்கும் ஓபன் பிரிவில் இந்திய அணிகள் அசத்தி வருகின்றன. செஸ் ஒலிம்பியாட்டின் 9ஆவது சுற்றில் இந்தியாவின் 2 அணிகளும் வெற்றி தோல்வி இல்லாமல் டிராவில் முடிந்தன. இந்திய ஆடவர் அணி உஸ்பெகிஸ்தானுடன் மோதியது. இதில் 2-2 என டிராவில் முடிந்தது. கடந்தாண்டு சென்னையில் நடைபெற்ற 44ஆவது செஸ் ஒலிம்பியாட்டில் உஸ்பெகிஸ்தான் அணி தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

மகளிர் பிரிவில் அமெரிக்காவுடன் 2-2 என டிரா செய்தது. 9 சுற்றுகள் முடிவில் இந்தியாவின் மகளிர் அணி 15 புள்ளிகளுடன் 2ஆவது இடத்திலும் ஓபன் பிரிவில் ஆடவர் அணி 17 புள்ளிகளுடன் முதலிடத்தை தக்கவைத்துள்ளது. 10ஆவது சுற்றில் ஆடவர் அணி அமெரிக்காவுடனும் மகளிரி பிரிவில் சீனாவுடனும் மோதுகிறது. மீதமிருக்கும் 2 சுற்றுகளில் வெற்றி பெற்றால் இந்திய அணி தங்கத்தை வெல்லாம்.

______________________________________________________________________________

வங்கதேச வீரர் ரஹீம் சாதனை 

இந்தியா - வங்காளதேசம் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த 19-ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்காளதேசம் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதல் இன்னிங்சை விளையாடிய இந்தியா 376 ரன்கள் அடித்ததுஇதையடுத்து 227 ரன்கள் முன்னிலையுடன் தனது 2வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா 287 ரன்கள் அடித்த நிலையில் டிக்ளேர் செய்தது. வங்கதேச அணியின் முன்னணி வீரரான முஷ்பிகுர் ரஹீம் 13 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். இருப்பினும் ரஹீம் சர்வதேச கிரிக்கெட்டில் மாபெரும் சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

இந்த இன்னிங்சில் ரஹீம் 6 ரன்கள் அடித்திருந்தபோது சர்வதேச கிரிக்கெட்டில் வங்காளதேச அணிக்காக அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற மாபெரும் சாதனையை படைத்தார். அவர் இதுவரை சர்வதேச கிரிக்கெட்டில் 15,201 ரன்கள் குவித்துள்ளார். இதற்கு முன்னர் அந்த அணிக்காக தமிம் இக்பால் 15192 ரன்கள் குவித்ததே அதிகபட்சமாக இருந்தது. தற்போது அவரை முந்தியுள்ள ரஹீம் புதிய சாதனையை படைத்துள்ளார். அந்த பட்டியல் வருமாறு., 1. முஷ்பிகுர் ரஹீம் - 15,201 ரன்கள், 2.தமிம் இக்பால் - 15,192 ரன்கள், 3. ஷகிப் அல் ஹசன் - 14,696 ரன்கள், 4.மக்மதுல்லா - 10,694 ரன்கள்.

______________________________________________________________________________

ஆப்கான் வீரர் ரஷித்கான் சாதனை 

ஆப்கானிஸ்தான் - தென் ஆப்பிரிக்கா இடையிலான 2-வது ஒருநாள் போட்டி சார்ஜாவில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 311 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக குர்பாஸ் 105 ரன்கள் அடித்தார். இதனையடுத்து 312 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி விளையாடிய தென் ஆப்பிரிக்கா வெறும் 134 ரன்களில் ஆல் அவுட்டானது. இதன்மூலம் 177 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அபார வெற்றி பெற்றது. அத்துடன் ஒருநாள் தொடரை 2-0 என கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்துள்ளது. ஆப்கானிஸ்தான் சார்பில் ரஷித் கான் 5 விக்கெட்டும், கரோடி 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.

முன்னதாக ரஷித் கானுக்கு நேற்று முன்தினம் பிறந்தநாள் ஆகும். இதன் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் தன்னுடைய பிறந்தநாளில் அதிகபட்ச விக்கெட்டுகள் கைப்பற்றிய வீரர் என்ற மாபெரும் சாதனையை அவர் படைத்துள்ளார். அந்த பட்டியல் வருமாறு, 1. ரஷித் கான் - 5 விக்கெட்டுகள், 2. பிலாண்டர்/பிராட் - 4 விக்கெட்டுகள்.

______________________________________________________________________________

தொடரை வென்றது ஆப்கானிஸ்தான்

ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் ஐக்கிய அமீரகத்தின் ஷார்ஜாவில் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவை 106 ரன்களுக்குள் சுருட்டி ஆப்கானிஸ்தான் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. 2ஆவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் 311 ரன்கள் குவித்தது. குர்பாஸ் 10 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் உள்பட 105 ரன்கள் எடுத்தார். அஜ்மதுல்லா 86 ரன்களும் ரஹ்மத் 50 ரன்களும் எடுத்தார்கள்.

அடுத்து ஆடிய தென்னாப்பிரிக்க அணி 34.2 ஓவர்களில் 134 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. டெம்பா பவுமா அதிகபட்சமாக 38 ரன்கள் எடுத்தார். ஆப்கானிஸ்தான் சார்பில் ரஷித் கான் 5 விக்கெட்டுகள் எடுத்து ஆட்ட நாயகன் விருதினையும் பெற்றார். 9 ஓவர்கள் வீசிய ரஷித் கான் 39 பந்துகளில் ரன்கள் ஏதும் கொடுக்காமல் 5 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். 3 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என தொடரை கைப்பற்றியுள்ளது ஆப்கானிஸ்தான் அணி. தென்னாப்பிரிக்க அணி தனது மோசன்மான கிரிக்கெட்டினை விளையாடி வருகிறது.

______________________________________________________________________________

ஜடேஜா மீது பொறாமை: அஸ்வின்

ரவீந்திர ஜடேஜாவுக்கு இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர்களில் ஒருவரான ரவிச்சந்திரன் அஸ்வின் புகழாரம் சூட்டியுள்ளார். இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகின்றன. முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 144 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியபோது, ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரும் சிறப்பாக விளையாடி இந்திய அணி நல்ல ஸ்கோரை எட்டுவதற்கு உதவினர்.

ரவீந்திர ஜடேஜாவைப் பார்த்து எப்போதும் பொறாமைப்படுவதாக அவரை ரவிச்சந்திரன் அஸ்வின் வெகுவாக பாராட்டியுள்ளார். ரவீந்திர ஜடேஜா குறித்து அஸ்வின் பேசியதாவது: ரவீந்திர ஜடேஜாவைப் பார்த்து எப்போதும் பொறாமைப் படுகிறேன். அவர் மிகவும் திறமையானவர். அவரது திறன்களை மிகவும் சரியாக பயன்படுத்திக் கொள்கிறார். நான் அவராக இருக்க ஆசைப்படுவேன். ஆனால், நான் நானாக இருப்பதிலேயே மகிழ்ச்சியாக இருக்கிறேன். அவர் மிகச் சிறந்த கிரிக்கெட் வீரர். அவர் நன்றாக செயல்படுவதைப் பார்த்து நான் மகிழ்ச்சி கொள்கிறேன். அவர் கடந்த சில ஆண்டுகளாக பேட்டிங் செய்வதைப் பார்த்து, நாம் எவ்வாறு சிறப்பாக பேட் செய்யலாம் என யோசித்துள்ளேன்.  பந்துவீச்சை பொறுத்தவரையில், அவர் மிகவும் எளிமையாக செயல்படுவார். நாங்கள் இருவரும் பந்துவீச்சில் ஒன்றாக வளர்ந்து வந்தோம். இருவரும் சிறப்பாக செயல்பட்டுள்ளோம். எனது வெற்றியை அவரும், அவரது வெற்றியை நானும் கொண்டாடுகிறோம் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து