முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பழம்பெரும் மலையாள நடிகை கவியூர் பொன்னம்மா மறைவு : நடிகர் கமல்ஹாசன் இரங்கல்

ஞாயிற்றுக்கிழமை, 22 செப்டம்பர் 2024      சினிமா
Ponnamma 2024-03-22

Source: provided

திருவனந்தபுரம் : மலையாளத் திரையுலகின் பழம்பெரும் நடிகை கவியூர் பொன்னம்மா உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 80. அவரது மறைவுக்கு நடிகர் கமலஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். 

நடிகை கவியூர் பொன்னம்மா 700-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். பிரபல நடிகர்களான மோகன்லால், நசீர் மற்றும் மம்மூட்டி உள்ளிட்ட நடிகர்களுக்கு அம்மாவாக அவர் நடித்துள்ளார். மேலும் நான்கு முறை கேரள அரசின் மாநில விருதுகளையும் அவர் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கவியூர் பொன்னம்மா மறைவுக்க நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 

எல்லா நடிகர்களுக்கும் அம்மா என்று செல்லப் பெயரெடுத்தவர் மலையாளத் திரையின் சிறந்த குணச்சித்திர நடிப்புக் கலைஞரான கவியூர் பொன்னம்மா. அவரது நடிப்புத் திறத்தால் அவரைத் தமிழ்த் திரைக்கும் (சத்யா) அழைத்து வந்தோம்.

தன் 13-ம் வயதில் மேடை நாடக கதாநாயகியாக அறிமுகமானவரின் கலைப்பயணம், சினிமா, சீரியல், விளம்பரங்கள் என்று தொடர்ந்தது. அம்மா கவியூர் பொன்னம்மா இயற்கை எய்தினார் என்ற செய்தி வருத்துகிறது. அவருடைய குடும்பத்தாருக்கு என் ஆறுதலைத் தெரிவிக்கிறேன். அன்னாருக்கு என் அஞ்சலி. இவ்வாறு அந்த பதிவில் கமலஹாசன் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து