முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருச்சி - பாங்காக் இடையே நேரடி விமான சேவை துவக்கம்

ஞாயிற்றுக்கிழமை, 22 செப்டம்பர் 2024      தமிழகம்
Trichy-Bangkok 2024-03-22

Source: provided

திருச்சி : திருச்சி விமான நிலையத்திலிருந்து தாய்லாந்து நாட்டிற்கு விமான சேவை மீண்டும் தொடங்கியது. 

திருச்சி விமான நிலையத்தில் இருந்து பல்வேறு வெளிநாடுகளான மலேசியா, சிங்கப்பூர், மஸ்கட், ஓமன், துபாய், அபுதாபி, இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது. 

தற்போது திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையம் திறக்கப்பட்ட பின்பு மேலும் பல்வேறு நாடுகளுக்கு விமான சேவைகள் இயக்கப்படும் வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு முதல் திருச்சியில் இருந்து பாங்காக்கிற்கு, தாய் ஏர்வேஸ் மற்றும் ஏர் ஏசியா நிறுவனம் இணைந்து புதிய விமான சேவையை துவங்கியது. 

இந்த விமானம் நேரடியாக திருச்சியில் இருந்து பாங்காக்கிற்கு இயக்கப்படுகிறது. இதன் முதல் சேவை நேற்று முன்தினம் இரவு திருச்சி விமான நிலையத்தில் துவங்கியது. 

இந்த சேவையானது வாரத்திற்கு செவ்வாய், வியாழன், சனி ஆகிய மூன்று நாட்களில் திருச்சி விமான நிலையத்தில் இருந்து நேரடியாக பாங்காக்கிற்கு இயக்கப்பட உள்ளது. 

இந்த விமான சேவை துவக்க நாளன்று திருச்சி விமான நிலையத்தில் தரையிறங்கிய முதல் விமானத்திற்கு விமான நிலைய ஆணைய குழுவின் சார்பில் வாட்டர் சல்யூட் முறையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்த விமானமானது மேற்கண்ட மூன்று நாட்களில் இரவு 10:35 மணிக்கு திருச்சி விமான நிலையத்தை வந்து அடைந்து மீண்டும் இரவு 11 05 மணிக்கு திருச்சி விமான நிலையத்திலிருந்து பாங்காக்கிற்கு புறப்பட்டு செல்லும் என விமான நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நேற்று முன்தினம் இரவு பாங்காக்கில் இருந்து திருச்சி வந்த விமானத்தில் 46 பயணிகளும் மீண்டும் திருச்சியில் இருந்து பாங்காக் புறப்பட்ட விமானத்தில் 176 பயணிகளும் பயணம் செய்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து