முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழ்நாடு அரசே மதுக்கடைகளை இழுத்து மூடு: மீண்டும் பரபரப்பு வீடியோ வெளியிட்ட திருமாவளவன்

ஞாயிற்றுக்கிழமை, 22 செப்டம்பர் 2024      தமிழகம்
Thirumavalavan 2024 09 14

Source: provided

சென்னை : தமிழ்நாடு அரசே, மதுக்கடைகளை இழுத்து மூடு என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் நேற்று வெளியிட்டுள்ள வீடியோவில் தெரிவித்துள்ளார். 

தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் கடந்த சில நட்களுக்கு முன்பு ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும்  என்று வீடியோ வெளியிட்டு  இருந்தார். 

கள்ளக்குறிச்சியில் அக்டோபர்  2-ம் தேதி நடத்தப்பட உள்ள மது ஒழிப்பு மாநாட்டில் அ.தி.மு.க.வுக்கும் அவர் அழைப்பு விடுத்தார். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அமெரிக்காவில் இருந்து திரும்பிய முதல்வர்  மு.க.ஸ்டாலினை திருமாவளவன் சந்தித்து பேசினார். 

இதைத் தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் நடத்தும் மாநாட்டில் தி.மு.க.வும் பங்கேற்க முடிவு செய்துள்ளது. இதனால் தி.மு.க.-விடுதலை சிறுத்தைகள் இடையே நீடித்து வந்த சலசலப்பு அடங்கியது.

இந்த நிலையில் திருமாவளவன் மது விலக்கு தொடர்பாக நேற்று  மீண்டும் பரபரப்பான பதிவுகளை வெளியிட்டு வீடியோவையும் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

அனைத்துக் கட்சிகளும் மது வேண்டாம், போதைப் பொருள் வேண்டாம், மது விலக்கு தேவை என்னும் கருத்தில் உடன்படுகின்றன. ஆனால், இந்தியா முழுவதும் மதுக்கடைகள் திறந்து இருக்கின்றன.

மது ஆலைகள் இயங்குகின்றன. இதுதான் நாம் முன்வைக்கிற கேள்வி. எல்லா கட்சிகளும் மதுவிலக்கு தேவை என்னும் கருத்தில் உடன்படுகிறபோது இன்னும் ஏன் மதுக்கடைகள் திறந்து இருக்கின்றன?அனைவரும் சேர்ந்து ஒருமித்த முடிவு எடுக்கிற போது ஒரே நாளில் மதுக்கடைகளை மூடிவிட முடியும்.

இந்திய அரசே! தேசிய மதுவிலக்கு கொள்கையை உருவாக்கு.  மதுவிலக்கு சட்டத்தை இயற்று. தமிழ்நாடு அரசே, மதுக்கடைகளை இழுத்து மூடு. இவ்வாறு அந்த வீடியோவில் அவர் கூறியிருக்கிறார்.   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து