முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை விமான நிலைய வளாகத்தில் இரு சக்கர வாகனங்களுக்கு திடீர் தடை

செவ்வாய்க்கிழமை, 24 செப்டம்பர் 2024      தமிழகம்
Chennai Airport

Source: provided

சென்னை : சென்னை விமான நிலைய வளாகத்தில் இரு சக்கர வாகனங்களுக்கு திடீர் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை விமான நிலையம் தமிழகத்தில் முக்கிய விமான நிலையமாக இருந்து வருகிறது. இந்த விமான நிலையத்தில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வெளிநாடுகள் மற்றும் உள்நாடுகளுக்கு விமானம் மூலம் பயணம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் சென்னை விமான நிலைய வளாகத்தில் இரு சக்கர வாகனங்களுக்கு திடீர் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பணியாளர்கள், ஒப்பந்த ஊழியர்கள் மற்றும் பயணிகளை வழியனுப்ப, வரவேற்க வந்தவர்கள் பெரும் அவதி அடைந்தனர்.

அதிகாரப்பூர்வமாக எந்த உத்தரவும் வராத நிலையில், பார்க்கிங் மேலாண்மை செய்யும் நிறுவனத்தின் ஊழியர்கள் இரு சக்கர வாகனங்களை உள்ளே வரக்கூடாது என தடுப்பதாக பயணிகள் புகார் கூறினர். மெட்ரோ நிலையம் உள்ள பார்க்கிங் பகுதியில் நிறுத்திவிட்டு நடந்து வருமாறு ஊழியர்கள் அறிவுறுத்தினர். விமான நிலைய வளாகத்தில் இரு சக்கர வாகனங்களுக்கு திடீர் தடை விதிக்கப்பட்டிருப்பது பொதுமக்கள், விமான பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து