முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாலியல் வழக்கு: பிரபல மலையாள நடிகர் முகேஷ் கைதாகி ஜாமினில் விடுதலை

செவ்வாய்க்கிழமை, 24 செப்டம்பர் 2024      சினிமா
Mukesh 2024-03-24

Source: provided

கொச்சி : நடிகை அளித்த பாலியல் குற்றச்சாட்டில் மலையாள நடிகரும், எம்.எல்.ஏ.வுமான முகேஷ் கைது செய்யப்பட்டார். அவரிடம் 3 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டு, பின்னர் ஜாமினில் அவர் விடுக்கப்பட்டார்.

மலையாள திரையுலகில் பெண்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்படுகிறார்களா என்பது குறித்து ஆய்வு செய்ய நீதிபதி ஹேமா தலைமையிலான 3 பேர் கொண்ட குழுவை கேரள அரசு அமைத்தது. 

இக்குழுவின் அறிக்கை கடந்த மாதம் வெளியாகி மலையாள திரையுலகை அதிரவைத்துள்ளது. நடிகர் சித்திக், இயக்குனர் ரஞ்சித், நடிகரும் எம்.எல்.ஏ.வுமான முகேஷ், ஜெயசூர்யா உள்ளிட்டோர் மீது சில நடிகைகள் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்தனர். 

இதனை தொடர்ந்து ரஞ்சித், சித்திக், முகேஷ் உள்ளிட்ட 7 பேர் மீது போலீசார் பாலியல் வன்கொடுமை வழக்கு பதிந்தனர். அந்த வழக்கில் இருந்து தங்களுக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும் என்று நடிகர் முகேஷ், எர்ணாகுளம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். 

இதனை விசாரித்த நீதிமன்றம், முகேஷ்க்கு முன்ஜாமின் வழங்கியதுடன், ஐந்து நாட்களுக்கு கைது செய்யவும் தடை விதித்திருந்தது. இந்த நிலையில் நேற்று  முகேஷை கைது செய்த போலீசார், கொச்சியில் சிறப்பு புலனாய்வு குழு (எஸ்.ஐ.டி) முன்பு அவரை ஆஜர்படுத்தினர். அங்கு அவரிடம் சுமார் 3 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. 

விசாரணையின் முடிவில் அவருக்கு ஜாமின் வழங்கப்பட்டது. விசாரணை குறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு பதில் சொல்லாமல் புறப்பட்டு சென்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து