முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மராட்டியத்தில் சட்டவிரோதமாக வசித்து வந்த 5 வங்கதேசத்தினர் கைது

செவ்வாய்க்கிழமை, 24 செப்டம்பர் 2024      இந்தியா
Jail 2024-05-01

மும்பை, மராட்டியத்தில் சட்டவிரோதமாக வசித்து வந்த வங்காளதேசத்தினர் 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.  

வங்காளதேசம், மியான்மர் நாடுகளில் இருந்து சட்டவிரோதமாக எல்லை வழியாக இந்தியாவுக்குள் நுழையும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் குடும்பம் குடும்பமாக நுழையும் நபர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மாற்று பெயர், அடையாள அட்டையுடன் சட்டவிரோதமாக வசித்து வருகின்றனர். 

அந்த நபர்களை கைது செய்ய மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன. இந்நிலையில், மராட்டிய மாநிலத்தின் பகல்ஹர் மாவட்டம் நல சோப்ரா பகுதியில் வங்காளதேசத்தை சேர்ந்தவர்கள் சட்டவிரோதமாக வசித்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

தகவலின் அடிப்படையில் போலீசார்  அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, நல சோப்ரா பகுதியில் உரிய ஆவணமும் இன்றி சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்கதேசத்தை சேர்ந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர். 

கைது செய்யப்பட்ட அனைவரும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவுக்குள் நுழைந்துள்ளனர். இதையடுத்து உரிய ஆவணமின்றி இந்தியாவில் சட்டவிரோதமாக வசித்து வந்த வங்கதேசத்தினர் 5 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர். சிறையில் அடைக்கப்பட்ட 5 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து