முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாலியல் புகார்: பிரபல மலையாள நடிகர் சித்திக்கின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி

செவ்வாய்க்கிழமை, 24 செப்டம்பர் 2024      சினிமா
Siddique 2024-03-24

திருவனந்தபுரம், பாலியல் புகாரில் சிக்கிய பிரபல மலையாள நடிகர் சித்திக் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனுவை கேரள ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. 

பிரபல மலையாள நடிகரான சித்திக் மலையாள நடிகர் சங்கமான அம்மாவின் பொதுச்செயலாளராக இருந்தார். ஹேமா கமிட்டி அறிக்கை வெளியான பின் மலையாள துணை நடிகையான ரேவதி சம்பத் நடிகர் சித்திக் மீது பாலியல் புகார் தெரிவித்தார். இது மலையாள திரையுலகில் பெரும் புயலைக் கிளப்பியது. 

கடந்த 2016-ம் ஆண்டு படப் பிடிப்பில் கலந்து கொண்ட அவர் அன்று இரவு திருவனந்தபுரத்தில் உள்ள ஸ்டார் ஓட்டலில் தங்கியிருந்தபோது, அதே ஓட்டலில் தங்கியிருந்த நடிகர் சித்திக் தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டியிருந்தார்.

இதையடுத்து, மலையாள நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளர் பொறுப்பை சித்திக் ராஜினாமா செய்தார். புகாரின் பேரில் தற்போது சித்திக் மீது போலீசார் ஜாமீனில் வெளியே வராத வகையில் வழக்குப்பதிவு செய்தனர். 

விசாரணையில், நடிகையும் சித்திக்கும் ஓட்டலில் தங்கியதற்கான ஆதாரங்களை போலீசார் கைப்பற்றினர். தன் மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்றும் முன் ஜாமீன் கோரியும் நடிகை சித்திக் கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நேற்று கேரள ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நடிகர் சித்திக் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனுவை கேரள ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. 

பாலியல் புகாரில் மலையாள நடிகர் சித்திக்கின் முன் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அவர் வெளிநாட்டிற்கு தப்பி செல்வதை தடுக்கும் வகையில் கேரளா போலீசார் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து