முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டாக்டர்கள் மீதான தாக்குதல் எதிரொலி: மே.வங்கத்தில் ஜூனியர் மருத்துவர்கள் மீண்டும் பணி நிறுத்த போராட்டம்

ஞாயிற்றுக்கிழமை, 29 செப்டம்பர் 2024      இந்தியா
Kolkata-1 2024 08 13

Source: provided

கொல்கத்தா : மேற்கு வங்கத்தில் அரசு மருத்துவமனையில் மருத்துவ பணியாளர்கள் தாக்க்கப்பட்டதைத் தொடர்ந்து, ஜூனியர் மருத்துவர்கள் பணி நிறுத்த போராட்டத்தை தொடர்வதாக அறிவித்துள்ளனர். 

மேற்கு வங்க மாநிலம் ஆர்.ஜி.கர் அரசு மருத்துவமனையில் பெண் டாக்டர் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டதை கண்டித்து ஜூனியர் மருத்துவர்கள் 42 நாள் பணி நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். முதல்வர் மம்தா உறுதி அளித்ததைத் தொடர்ந்து, கடந்த 20-ம் தேதி பணிக்கு திரும்புவதாக அறிவித்தனர். 

இதற்கிடையே, வடக்கு 24 பர்கனாஸ் மாவட்டம் கமர்ஹாத்தியில் உள்ள சாகர்தத்தா அரசு மருத்துவமனையில் கடந்த 27-ம் தேதி இரவு மூச்சுத்திணறலுடன் அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவர் பலியானார். செயற்கை ஆக்சிஜன் தருவதற்கான ஏற்பாடுகள் செய்வதற்குள் அந்த பெண் இறந்ததாக மருத்துவர்கள் தரப்பில் கூறப்படுகிறது. 

ஆனால் மருத்துவர்கள் எந்த சிகிச்சையும் தராமல் இருந்ததாக நோயாளியின் உறவினர்கள் 10க்கும் மேற்பட்டோர் குற்றம்சாட்டி, பெண்கள் வார்டில் இருந்த ஜூனியர் மருத்துவர்கள், செவிலியர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தை கண்டித்து சாகர்தத்தா அரசு மருத்துவமனை ஜூனியர் மருத்துவர்கள், செவிலியர்கள் மீண்டும் பணி நிறுத்த போராட்டத்தை தொடர்வதாக நள்ளிரவில் அறிவித்தனர். இந்த சம்பவத்தை கண்டித்து மாநிலம் முழுவதும் ஜூனியர் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 4 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 4 days ago
View all comments

வாசகர் கருத்து