முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீரில் தீவிரவாதிகள் 2 பேர் சுட்டுக்கொலை

ஞாயிற்றுக்கிழமை, 29 செப்டம்பர் 2024      இந்தியா
Kashmir 2023 04 09

Source: provided

ஸ்ரீநகர் : காஷ்மீரில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 

ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் அதிகாம் கிராமத்தில் தேவ்சர் பகுதியில் வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு இருந்த போது தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இதற்கு வீரர்களும் தகுந்த பதிலடி கொடுத்தனர்.

இந்த என்கவுன்டரில் அடையாளம் தெரியாத இரண்டு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். ஒரு அதிகாரி உட்பட 5 பாதுகாப்புப் படையினர் காயமடைந்தனர் என்று போலீசார் தெரிவித்தனர். 

கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு (போக்குவரத்து) மும்தாஜ் அலியும் காயம் அடைந்தார். நேற்று முன்தினம் மாலை கதுவா மாவட்டம் பில்லவர் தாலுகாவில் உள்ள கோக்-மண்ட்லி கிராமத்தில் தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் ஒரு போலீஸ் ஏட்டு கொல்லப்பட்டார். உதவி சப்-இன்ஸ்பெக்டர் காயமடைந்தார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 4 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 4 days ago
View all comments

வாசகர் கருத்து