முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

துணை முதல்வர் உதயநிதிக்கு எம்.பி. கனிமொழி வாழ்த்து

ஞாயிற்றுக்கிழமை, 29 செப்டம்பர் 2024      தமிழகம்
Kanimozhi

Source: provided

சென்னை : துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மிகச்சிறப்பாக செயல்பட வேண்டும், அவருக்கு என்னுடைய வாழ்த்துகள் என்று திமுக எம்.பி. கனிமொழி கூறியுள்ளார்.

அமைச்சராக இருந்துவரும் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்-அமைச்சர் பொறுப்பு கொடுக்கப்பட்டு உள்ளது. அவருக்கு திமுக கூட்டணி கட்சி தலைவர்கள், அமைச்சர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், சென்னையில் திமுக துணைப் பொதுச்செயலாளரும், தூத்துக்குடி எம்.பி.யுமான கனிமொழி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

துணை முதல்-அமைச்சராக அறிவிக்கப்பட்ட உதயநிதி ஸ்டாலினுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். அவர் சிறப்பாக செயல்பட வேண்டும். அறிவுரை யாருக்கும் அவசியம் இல்லை எல்லாருக்கும் என்ன செய்ய வேண்டும் என்று தெரியும். புதிய அமைச்சர்களாக பொறுப்பு ஏற்கும் அமைச்சர்களுக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். நான் அறிவுரை கூற வேண்டிய அவசியம் இல்லை. துணை முதல்-அமைச்சர் நியமனம் என்பது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் முடிவு என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 4 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 4 days ago
View all comments

வாசகர் கருத்து