முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயிலில் வரும் 21-ம் தேதி 31 ஏழை ஜோடிகளுக்கு திருமணத்தை முதல்வர் நடத்தி வைக்கிறார் : அமைச்சர் சேகர்பாபு தகவல்

வெள்ளிக்கிழமை, 18 அக்டோபர் 2024      தமிழகம்
Sekarbabu-2023 04 06

Source: provided

சென்னை : வரும் 21-ம் தேதி திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயிலில் 31 ஏழை ஜோடிகளுக்கு திருமணத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் நடத்தி வைக்கவுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். 

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தில் சென்னை மண்டல திருக்கோயில்கள் சார்பில் நடைபெற உள்ள திருமண விழாக்களை முன்னிட்டு மனமக்களுக்கு வேட்டி, சேலைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு  அமைச்சர் சேகர்பாபு தலைமை தாங்கி மணமக்களுக்கு வேட்டி, சேலைகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, 

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் பக்தர்களுக்கு லட்டு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தமிழகம் முழுவதும் 11 திருக்கோயில்களில் முழு வேலை அன்னதான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

சித்தர்களுக்கு விழா எடுத்த ஆட்சி திராவிட மாடல் ஆட்சி. திருக்கோயில்களின் சார்பில் சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில தான் மகாசிவராத்திரி விழா தி.மு.க. ஆட்சியில் தான் முதல் முதலில் நடத்தப்பட்டுள்ளது. புதிதாக இந்த ஆண்டு இரண்டு திருக்கோயில்களில் மகா சிவராத்திரி விழா நடத்தப்பட உள்ளது.

1020 பேர் அறுபடை வீடுகளில் கட்டணம் இல்லாத தரிசனத்தை பெற்றுள்ளனர். முதல்வரின் இலவச கட்டணமில்லா திருமண திட்டத்தின் மூலம் 700 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தப்படவுள்ளது. வரும் 21-ம் தேதி திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயிலில் 31 ஜோடிகளுக்கு முதல்வர் தலைமையில் திருமணம் நடைபெற உள்ளது. வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் நிச்சயம் அமைக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து