முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சட்டவிரோதமாக தங்கியிருந்த இந்தியர்களை திருப்பி அனுப்பியது அமெரிக்கா

ஞாயிற்றுக்கிழமை, 27 அக்டோபர் 2024      உலகம்
America 2024-10-27

Source: provided

அமெரிக்கா : அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த இந்தியர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர் என்று உள்நாட்டு பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.

கல்வி, வேலைவாய்ப்புகளுக் காக அமெரிக்கா செல்ல வேண்டும் என்று உலகளவில் ஏராளமானோர் ஆர்வமாக உள்ளனர். அதேநேரத்தில் சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைய தொடர்ந்து முயற்சி செய்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

குறிப்பாக கொலம்பியா, ஈக்குவடார், பெரு, எகிப்து, மோரிடோனியா, செனகல், உஸ்பெகிஸ்தான், சீனா, இந்தியா உட்படபல நாடுகளில் இருந்து சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைய பலர் முயற்சிக்கின்றனர். அவர்களை தடுத்து நிறுத்த அமெரிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில், சட்டவிரோதமாக தங்கியிருந்த இந்தியர்களை கடந்த 22-ம் தேதி திருப்பி அனுப்பியதாக அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் துறை  தெரிவித்துள்ளது. ஆனால், இந்தியர்கள் எத்தனை பேர் திருப்பி அனுப்பப்பட்டனர் என்ற தகவலை தெரிவிக்கவில்லை.

இது குறித்து அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் துறை துணை செயலர் பொறுப்பு வகிக்கும் மூத்த அதிகாரி கிறிஸ்டி ஏ கேன்கலோ கூறும்போது, 

சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கியிருந்த இந்தியர்களை கடந்த 22-ம் தேதி வாடகை விமானத்தை ஏற்பாடு செய்து அனுப்பி வைத்தோம். இந்த நடவடிக்கை இந்திய அரசின் ஒத்துழைப்புடன்தான் எடுக்கப்பட்டது என்றார்.

அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்காவுக்கு வர சட்டவழிகளைப் பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். ஆட்களை கடத்தி வருபவர்கள் சொல்லும் வார்த்தைகளை நம்பாதீர்கள். நடப்பு 2024 நிதி ஆண்டில் 145 நாடுகளை சேர்ந்த ஒரு லட்சத்து 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை அமெரிக்க அரசு அவரவர் நாட்டுக்கு திருப்பி அனுப்பி உள்ளது. இதற்காக 495 விமானங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன’ என்று தெரிவித்துள்ளது.

கடந்த ஜூன் மாதம் அமெரிக்க எல்லை தொடர்பான அறிவிப்பு உடனடியாக அமலுக்கு வந்தது. அதன்பின், அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. துறைமுகங்கள், எல்லைப் பகுதிகள் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இதனால் அமெரிக்காவின் தென் மேற்கு எல்லைப் பகுதியில் சட்டவிரோதமாக ஊடுருவல் நடப்பது 55 சதவீதம் குறைந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 2 days ago
View all comments

வாசகர் கருத்து