முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊடுருவலை நிறுத்தினால்தான் மே.வங்கத்தில் அமைதி திரும்பும் : மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு

ஞாயிற்றுக்கிழமை, 27 அக்டோபர் 2024      இந்தியா
amit-shah 1

Source: provided

பெர்டாபோல் : வங்கதேசத்தில் இருந்து வரும் ஊடுருவலைத் தடுத்து நிறுத்தினால்தான் மேற்குவங்கத்தில் அமைதியை நிலைநாட்ட முடியும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். 

மேற்கு வங்கத்தில் இந்திய வங்கதேச எல்லைப் பகுதியில் பெர்டாபோலில் உள்ள சோதனைச் சாவடியில்  புதிய பயணிகள் மற்றும் சரக்கு முனையத்தை உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று திறந்து வைத்தார். அப்போது அமித் ஷா பேசியதாவது,

இந்த பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்டுவதில் இந்தச் சோதனைச் சாவடிகள் முக்கிய பங்காற்றுகின்றன. எல்லைப் பகுதியில் சட்டரீதியாக உலவமுடியாத போது சட்டவிரோத ஊடுருவல் அதிகமாகிறது. இது நாட்டின் அமைதியை பாதிக்கிறது.

2026- ல் மாற்றத்தை ஏற்படுத்துமாறு நான் மேற்குவங்க மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். பின்பு ஊடுருவல் நிறுத்தப்பட்டு அமைதி தானாக வரும். அண்டை நாட்டில் இருந்து ஊடுருவல் நிறுத்தப்பட்டால் மட்டுமே மேற்கு வங்கத்தில் அமைதி திரும்பும்.

இரண்டு நாடுகளுக்கு இடையேயான உறவுகளை, இணைப்பை மேம்படுத்துவதில் சோதனைச் சாவடிகள் முக்கிய பங்காற்றுகின்றன. அவை இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தக உறவுகளையும் மேம்படுத்துகின்றன. இவ்வாறு அமித் ஷா பேசினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 2 days ago
View all comments

வாசகர் கருத்து