முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தங்கம் விலை சற்று உயர்வு

வெள்ளிக்கிழமை, 8 நவம்பர் 2024      தமிழகம்
Gold 2022-12-31

Source: provided

சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சற்று உயர்ந்து விற்பனையானது.

தங்கம் விலை இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்ட நிலையில், கடந்த மாதம் 16ம் தேதி ஒரு சவரன் ரூ.57 ஆயிரத்தை கடந்து புதிய உச்சத்தை பதிவு செய்தது. அதன் பின்னரும், தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகத்திலேயே பயணித்து வந்தது. இதனால் 2 நாள் இடைவெளியிலேயே அதாவது, கடந்த மாதம் 19ம் தேதி ஒரு சவரன் ரூ.58 ஆயிரம் என்ற நிலையையும் தாண்டியது.

அதனைத் தொடர்ந்தும் தங்கம் விலை உயர்ந்து வருவதை பார்க்க முடிகிறது. அந்த வகையில் தங்கம் விலை கடந்த மாதம் 30ம் தேதி ஒரு சவரம் ரூ.59 ஆயிரத்தை கடந்து புதிய உச்சம் பெற்றது. இதன் மூலம் தங்கம் விலை மீண்டும் வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியது. நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,320 குறைந்து ரூ.57,600-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், நேற்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.680 உயர்ந்து ரூ.58,280-க்கு விற்பனையானது. கிராமுக்கு ரூ.85 உயர்ந்து ரூ.7,285-க்கு விற்பனையானது. வெள்ளி விலை கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து ரூ.103-க்கு விற்பனையானது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து