எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட உரிய நடவடிக்கையினை விரைந்து மேற்கொள்ள வலியுறுத்தி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 23 மீனவர்கள் 9-11-2024 அன்று இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், நேற்று நாகப்பட்டினத்தைச் சேர்ந்த 12 மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.
அந்த கடிதத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியிருப்பதாவது,
இலங்கை அதிகாரிகளால் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது குறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சரின் கவனத்தை ஈர்க்க விரும்புகிறேன். இதுபோன்ற கைது நடவடிக்கைகள் மீனவர்களின் வாழ்வாதாரத்தைச் சீர்குலைப்பதோடு, அவர்களது குடும்பங்களுக்கு பெருத்த துயரத்தை ஏற்படுத்துகிறது.
கடந்த 09-ம் தேதி அன்று, இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 23 மீனவர்கள் IND-TN-10-MM-958 மற்றும் IND-TN-10-MM-641 ஆகிய பதிவெண்களைக் கொண்ட 2 இயந்திரமயமாக்கப்பட்ட மீன்பிடிப் படகுகள் மற்றும் பதிவு செய்யப்படாத ஒரு படகில் மீன்பிடிக்கச் சென்றிருந்த நிலையில், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், நேற்று 12-ம் தேதி அன்று, நாகப்பட்டினத்திலிருந்து பதிவெண் IND-TN-06-MM-8478 என்ற மீன்பிடிப் படகில் மீன்பிடிக்கச் சென்றிருந்த 12 மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, 2024-ம் ஆண்டில் தான் தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் அதிக அளவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எனவே, தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் இதுபோன்று தொடர்ந்து கைது செய்யப்படுவதைத் தடுக்கவும், கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விரைவாக விடுவிக்கவும் உடனடியாக தூதரக நடவடிக்கைகள் மூலம் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு முதல்வர் மு.க. ஸ்டாலின், மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு எழுதியுள்ள கடிதத்தில் வலியுறுத்தி உள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 month 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 month 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 months 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 14-11-2024.
14 Nov 2024 -
சபரிமலையில் மண்டல கால பூஜைக்காக ஐயப்பன் கோவில் நடை இன்று திறக்கப்படுகிறது
14 Nov 2024திருவனந்தபுரம், மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை திறக்கப்படுகிறது.
-
தகுதியுள்ள அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும்: தூத்துக்குடியில் துணை முதல்வர் உதயநிதி பேச்சு
14 Nov 2024தூத்துக்குடி, தகுதியுள்ள அனைத்து மகளிருக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதிபட தெரிவித்தார்.
-
ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ சென்னை அப்பல்லோவில் அனுமதி
14 Nov 2024சென்னை, ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
-
குழந்தைகள் தினத்தை முன்னிட்டு அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து
14 Nov 2024சென்னை, நாளைய உலகின் சிற்பிகளாகிய குழந்தைகள் அனைவருக்கும் குழந்தைகள் தின வாழ்த்துகள் என தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து தெரிவித்துள்ளார். 
-
அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுடன் வருபவர்களுக்கு டேக் அறிமுகப்படுத்த முடிவு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
14 Nov 2024சென்னை, நோயாளிகளுடன் வருபவர்களுக்கு சிவப்பு, மஞ்சள், பச்சை, நீல வண்ண டேக் அறிமுகப்படுத்தப்படும் என்று மருத்துவத்துறை மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரம
-
ஜெயங்கொண்டம் அருகே ரூ.1000 கோடி மதிப்பில் காலணி உற்பத்தி தொழிற்சாலை: முதல்வர் ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டுகிறார்
14 Nov 2024திருச்சி, ஜெயங்கொண்டம் அருகே உள்ள மகிமைபுரத்தில் 130 ஏக்கர் பரப்பளவில் செயல்பட்டு வரும் சிப்காட் தொழில் வளாகத்தில், தைவான் நாட்டை சேர்ந்த டீன் ஷூஸ் குழுமம் ரூ.1,000 கோட
-
பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை: எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்
14 Nov 2024கிருஷ்ணகிரி, நான் கூட்டணிக்கு வருமாறு வேண்டுகோள் விடுப்பது மற்ற கட்சிகளுக்கு தான். பா.ஜ.க.
-
பிரதமர் மோடிக்கு உயரிய தேசிய விருது: டொமினிகா அரசு அறிவிப்பு
14 Nov 2024புது டெல்லி, காமன்வெல்த் ஆப் டொமினிகா தனது உயரிய தேசிய விருதான டொமினிகா விருதை பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது.
-
ஜாமின் மனு தள்ளுபடி எதிரொலி: நடிகை கஸ்தூரியை பிடிக்க 2 தனிப்படைகள் அமைப்பு
14 Nov 2024சென்னை, மதுரை ஐகோர்ட் கிளையில் ஜாமின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் தலைமறைவாக உள்ள நடிகை கஸ்தூரியை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
-
திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் வைகுண்ட ஏகாதசி பந்தல்கால் நடும் நிகழ்ச்சி: ஜனவரி 10-ல் சொர்க்கவாசல் திறப்பு
14 Nov 2024திருச்சி, திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஆயிரங்கால் மண்டபம் அருகே பந்தல் கால் நடும் நிகழ்ச்சி நேற்று காலை நடைபெற்றது.
-
இளங்கலை படிப்பை முன்கூட்டியே முடிக்கும் புதிய முறை வரும் கல்வி ஆண்டில் அமல்: யு.ஜி.சி.
14 Nov 2024சென்னை, இளங்கலை பட்டப்படிப்பை முன்கூட்டியே படித்து முடிக்கும் புதிய முறை வரும் கல்வி ஆண்டில் அமல்படுத்தப்படும் என யு.சி.ஜி.
-
குழந்தைகள் தினம்: முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து
14 Nov 2024சென்னை, குழந்தைகள் தினத்தையொட்டி முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
14 Nov 2024சென்னை, தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
குடிநீர் கட்டணங்களுக்கு பசுமை வரி: கர்நாடக அரசு புதிய திட்டம்
14 Nov 2024பெங்களூரூ, ஆறுகளை பாதுகாக்கும் நடவடிக்கையாக குடிநீர் கட்டணங்களுடன் பசுமை வரியை விதிக்க கர்நாடக வனத்துறை முடிவு செய்துள்ளது.
-
ஹிஸ்புல்லா நடத்திய தாக்குதலில் 6 இஸ்ரேல் ராணுவ வீரர்கள் பலி
14 Nov 2024பெய்ரூட், ஹிஸ்புல்லா தாக்குதலில் இஸ்ரேல் ராணுவத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்தனர்.
-
ஷிப்ட் முறை தேர்வு அறிவிப்புக்கு எதிர்ப்பு: உ.பி. அரசு பணியாளர் தேர்வாணையத்துக்கு எதிராக தொடரும் மாணவர்கள் போராட்டம்:
14 Nov 2024லக்னோ, ஷிப்ட் முறை தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து உத்தரப்பிரதேசத்தில் அரசு பணியாளர் தேர்வாணையத்துக்கு மாணவர்களின் போராட்டம் 4-வது நாளாக தொடர்கிறது.
-
144 தடை உத்தரவு மீறல் வழக்கு: இம்ரான் கானை விடுதலை செய்து இஸ்லாமாபாத் கோர்ட் உத்தரவு
14 Nov 2024இஸ்லாமாபாத், 144 தடை உத்தரவு விதிமீறல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்து மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.
-
ராஜஸ்தானில் தேர்தல் பணியில் இருந்த துணை கலெக்டரை தாக்கிய சுயேச்சை வேட்பாளர் கைது
14 Nov 2024ஜெய்ப்பூர், ராஜஸ்தானில் தேர்தல் பணியில் இருந்த துணை கலெக்டரை சுயேச்சை வேட்பாளர் கன்னத்தில் அறைந்தார்.
-
சிதம்பரம் நடராஜர் கோவிலில் புதிய கொடி மரம் அமைக்கப்படும்: ஐகோர்ட்டில் அறநிலையத்துறை உறுதி
14 Nov 2024சென்னை, சிதம்பரம் நடராஜர் கோவிலில் பழைய கொடி மரத்தை அகற்றி விட்டு புதிய கொடி மரம் அமைக்கப்படும் என சென்னை ஐகோர்ட்டில் இந்து சமய அறநிலையத்துறை உறுதி அளித்துள்ளது.
-
மருத்துவர் சுப்பையா கொலை வழக்கு: தமிழக அரசின் மேல் முறையீட்டு மனுவை ஏற்றது சுப்ரீம் கோர்ட்டு
14 Nov 2024புது டெல்லி, மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் தமிழக அரசின் மேல் முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட்டு விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது.
-
அமெரிக்க உளவுத்துறை இயக்குனராக துளசி கபார்டை நியமித்தார் டிரம்ப்
14 Nov 2024வாஷிங்டன், அமெரிக்க உளவுத்துறை இயக்குனராக முன்னாள் எம்.பி. துளசி கபார்டை நியமனம் செய்துள்ளார் டிரம்ப்.
-
தி கார்டியன் நாளிதழ் எக்ஸ் தளத்தில் இருந்து விலகல்: எலான் மஸ்க் மீது பரபரப்பு குற்றச்சாட்டு
14 Nov 2024லண்டன், 200 ஆண்டுகள் பாரம்பரிய மிக்க இங்கிலாந்தை சேர்ந்த ஆங்கில செய்தி நிறுவனமான தி கார்டியன் டுவிட்டர் தளத்தில் இருந்து விலகியுள்ளது.
-
வெடிகுண்டு மிரட்டல் எதிரொலி: ராய்ப்பூரில் இண்டிகோ விமானம் அவசரமாக தரையிறக்கம்
14 Nov 2024ராய்ப்பூர், நாக்பூரில் இருந்து கொல்கத்தாவுக்கு புறப்பட்ட இண்டிகோ விமானத்துக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் காரணமாக விமானம் அவசர அவசரமாக ராய்ப்பூரில் தரையிறக்கப்பட
-
ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் புகழாரம்
14 Nov 2024புது டெல்லி, சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாள் நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்ட நிலையில் பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் புகழா