முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வன்முறை தொடர்ந்து அதிகரிப்பு: மணிப்பூரில் ஊரடங்கு அமல்

செவ்வாய்க்கிழமை, 12 நவம்பர் 2024      இந்தியா
Manipur 2023 06 06

இம்பால், மணிப்பூர் மாநிலத்தில் ஓரிரு இடங்களில் கடந்த சில நாள்களாக வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளத்தை அடுத்து அங்கு காலவரையற்ற ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஜிர்பாம் நகருக்குத் தெற்கே 30 கி.மீ. தொலைவில் அடர்ந்த வனப்பகுதி மற்றும் மலைகளால் சூழப்பட்ட போரோபெக்ரா கிராமம் அமைந்துள்ளது. அங்குள்ள காவல் நிலையம் மற்றும் அதையொட்டி அமைந்த மத்திய ஆயுதக் காவல் படை (சிஆர்பிஎஃப்) முகாம் மீது அதிநவீன ஆயுதங்களைப் பயன்படுத்தி தீவிரவாதிகள் திங்கள்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தினர். தொடர்ந்து அருகேயுள்ள சந்தைக்குள் நுழைந்த தீவிரவாதிகள், கடைகளுக்குத் தீ மூட்டியதுடன் பொதுமக்களின் வீடுகளையும் சூறையாடினர்.

இதையடுத்து, பதற்றமான சூழல் நிலவி வருவதைத் தொடர்ந்து கூடுதல் பாதுகாப்புப் படையினர் வரவழைக்கப்பட்டு, மாயமானவர்களைத் தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

ஜிரிபாம் மாவட்ட நிர்வாகம் பிறப்பித்துள்ள உத்தரவில், ஜிரிபாம் மாவட்டத்தில் ஒரு சில சமூக விரோத சக்திகள் நடத்திவரும் சட்டவிரோத நடவடிக்கைகளால் அமைதியும் சட்டம் ஒழுங்கும் சீர்குலையும் நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பொது இடங்களில், 5 அல்லது அதற்கும் மேற்பட்ட நபர்கள் ஒருசேர கூடுவதற்கு தடை விதிக்கப்படுகிறது. அதேபோல, மக்கள் கூர்மையான ஆயுதங்கள், கற்கள், குச்சிகள் போன்றவற்றை வைத்திருப்பதற்கும் தடை விதிக்கப்படுகிறது.

மேலும், வரையறுக்கப்பட்டுள்ள இடங்களில் திருமணம், இறுதிச்சடங்கு உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு காவல்துறையிடம் உரிய அனுமதி பெற்ற பிறகே நடத்தலாம். மறு அறிவிப்பு வரும் வரை இந்த தடை உத்தரவு அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, மணிப்பூரின் பல்வேறு மாவட்டங்களிலும் ராணுவம், அஸ்ஸாம் ரைஃப்பிள்ஸ் மற்றும் பிற பாதுகாப்புப் படைகளுடன் இணைந்து கடந்த ஒரு வாரமாக மணிப்பூர் காவல்துறை மேற்கொண்ட தேடுதல் வேட்டையில், ஏராளமான ஆயுதங்கள், வெடி பொருட்கள் ஆகியன பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக, மேற்கு இம்பால், சூரச்சந்த்பூர், கேங்க்போக்பி, பிஷ்னுபூர், டென்ங்நௌபால், காக்சிங் ஆகிய பகுதிகளில் இந்த பொருள்கள் அதிகளவில் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து