முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.சி.சி.யின் சிறந்த வீரர் விருது: பாக்., வீரர் நோமன் அலி தேர்வு

செவ்வாய்க்கிழமை, 12 நவம்பர் 2024      விளையாட்டு
ICC 2023 08 04

Source: provided

துபாய் : ஐ.சி.சி-யின் அக்டோபர் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதை வென்ற பாகிஸ்தான் வீரர் நோமன் அலியும், சிறந்த வீராங்கனை விருதை நியூசிலாந்தின் மெலி கெர் வென்றுள்ளார்.

ஒவ்வொரு மாதமும்...

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) ஒவ்வொரு மாதமும் சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது. அதன்படி அக்டோபர் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்ய தலா 3 வீரர் மற்றும் வீராங்கனைகளை ஐ.சி.சி அறிவித்திருந்தது.அக்டோபர் மாதத்திற்கான சிறந்த வீரரை தேர்வு செய்ய ஐ.சி.சி வெளியிட்ட பரிந்துரை பெயர் பட்டியலில் பாகிஸ்தானின் நோமன் அலி, தென் ஆப்பிரிக்காவின் ககிசோ ரபாடா, நியூசிலாந்தின் மிட்செல் சாண்ட்னெர் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். இதேபோல், அக்டோபர் மாதத்திற்கான சிறந்த வீராங்கனையை தேர்வு செய்ய ஐ.சி.சி வெளியிட்ட பரிந்துரை பெயர் பட்டியலில் நியூசிலாந்தின் மெலி கெர், தென் ஆப்பிரிக்காவின் லாரா வோல்வார்ட், வெஸ்ட் இண்டீசின் டியான்ட்ரா டாட்டின் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

நோமன் - மெலி கெர்...

இந்நிலையில், அக்டோபர் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனை விருதை வென்றவர்கள் விவரங்களை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) வெளியிட்டது. அதன்படி, ஐ.சி.சி-யின் அக்டோபர் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதை பாகிஸ்தானின் நோமன் அலியும், அக்டோபர் மாதத்திற்கான சிறந்த வீராங்கனை விருதை நியூசிலாந்தின் மெலி கெர்ரும் வென்றுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து