முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை முன்னணி வீரர் விலகல்

செவ்வாய்க்கிழமை, 12 நவம்பர் 2024      விளையாட்டு
Sri-Lanka-1 2023-11-06

Source: provided

நியூசிலாந்து கிரிக்கெட் அணி இலங்கயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரில் இரு அணிகளும் தலா 1 வெற்றி பெற்றன. இதனால் டி20 தொடர் 1-1 என சமனில் முடிந்தது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் இன்று தொடங்குகிறது. முதல் ஒருநாள் போட்டி இந்திய நேரப்படி இன்று மதியம் 2.30 மணிக்கு தொடங்குகிறது. 

இந்நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து இலங்கை முன்னணி வீரரான வனிந்து ஹசரங்கா விலகி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது டி20 போட்டியில் பந்துவீசும்போது இடது தொடை தசையில் ஹசரங்காவுக்கு காயம் ஏற்பட்டதால் ஒருநாள் தொடரில் இருந்து விலகி உள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும், ஹசரங்காவுக்கு பதிலாக துஷான் ஹேமந்தா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

__________________________________________________________________________

பும்ரா பந்துவீச்சு: ஆஸி. வீரர் ஆர்வம்

இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முழுமையாக இழந்தது. இதையடுத்து இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் (பார்டர்-கவாஸ்கர் தொடர்) தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் வரும் 22ம் தேதி தொடங்குகிறது. 

இந்நிலையில் இந்தியாவின் ஜஸ்ப்ரீத் பும்ரா பந்துவீச்சை எதிர்கொள்ள தயாராக உள்ளதாகவும், அவருக்கு எதிராக பெரிய ரன்கள் குவிப்பதற்கான திட்டங்களை வகுத்து வருவதாகவும் ஆஸ்திரேலிய இளம் வீரரான மெக்ஸ்வீனி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது, பெர்த் நகரில் நடைபெறும் முதல் போட்டிக்கு நான் செல்லும் போது பயிற்சிகளையும் திட்டங்களையும் எடுத்துச் செல்வேன். இந்திய பவுலர்கள் எப்படி பந்து வீசுவார்கள் என்பதை அறிந்து கொள்ள நான் சில வீடியோக்களையும் பார்த்துள்ளேன். புதிய பவுலர்களை அவர்களுடைய ஆக்சன் காரணமாக சிறப்பாக எதிர்கொள்வது கொஞ்சம் கடினமாக இருக்கும். இருப்பினும் அதை செய்வதற்கு முன்பாக எனக்கு ஒரு வாரம் இடைவெளி இருக்கிறது. அதை பயன்படுத்தி இந்தியாவை சிறப்பாக எதிர்கொள்ள நன்கு தயாராக இருப்பேன் என்று நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

__________________________________________________________________________

சி.எஸ்.கே.வில் இடம்: தீபக் சாஹர்

18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் மெகா ஏலம் நவம்பர் மாதம் இறுதியில் நடக்க இருக்கிறது. அதற்கு முன்பாக தக்கவைக்கும் வீரர்களின் பட்டியலை அணிகள் ஐ.பி.எல். நிர்வாகத்திடம் சமர்ப்பித்தன. ஒரு அணி அதிகபட்சமாக 6 வீரர்கள் வரை தக்கவைக்க அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. அதன்படி ஐ.பி.எல்-லில் பங்கேற்கும் 10 அணிகளும் தாங்கள் தக்க வைத்துள்ள வீரர்களின் விவரங்களை அறிவித்துவிட்டன.அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி (சி.எஸ்.கே.) 5 வீரர்களை தக்கவைத்துள்ளது. அதன்படி எம்.எஸ்.தோனி, ருதுராஜ் கெய்க்வாட், ரவீந்திர ஜடேஜா, ஷிவம் துபே மற்றும் மதீசா பதிரானா ஆகிய 5 வீரர்களை அந்த அணி தக்கவைத்துள்ளது. சென்னை அணியின் முக்கிய வேகப்பந்துவீச்சாளர் தீபக் சாஹர் அணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் ,சி.எஸ்.கே. நிர்வாகம் என்னை ஏலத்தில் எடுக்கும் என நம்புகிறேன் என்று தீபக் சாஹர் தெரிவித்துள்ளார் .இது தொடர்பாக அவர் கூறியதாவது, 2025 ஐ.பி.எல். தொடருக்கான மெகா ஏலத்தில் சி.எஸ்.கே.  நிர்வாகம் என்னை ஏலம் எடுப்பார்கள் என நம்புகிறேன். கடைசியாக நடைபெற்ற மெகா ஏலத்தில் என்னை அவர்கள் தக்க வைக்கவில்லை. ஆனால் எனக்காக பல முயற்சிகளை மேற்கொண்டு மீண்டும் சென்னை அணிக்குள் கொண்டு வந்தனர். இந்த வருடம் என்ன நடக்கபோகிறது என்பது தெரியவில்லை. ஆனால் என் திறமைக்கு இப்போது அதிக மதிப்பு கிடைக்கும் என்று எனக்கு தெரியும். என தெரிவித்துள்ளார் 

__________________________________________________________________________

சச்சினின் சாதனை சமன் 

ஆப்கானிஸ்தான் - வங்கதேசம் அணிகள் மோதிய மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்வில் நேற்று நடைபெற்றது. இந்தப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 50 ஓவர்களில் 244 ரன்கள் எடுத்தது. அடுத்து இலக்கைத் துரத்திய ஆப்கானிஸ்தான் அணி 48.2 ஓவர்களில் 246 ரன்கள் எடுத்து வெற்றியைப் பதிவு செய்ததுடன் தொடரையும் கைப்பற்றி அசத்தியது. ஆப்கானிஸ்தான் அணியில் அதிகபட்சமாக ரஹ்மானுல்லா குர்பாஸ் 101 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இன்னும் 2 வாரங்களில் 23 வயதாகப் போகும் ரஹ்மானுல்லா குர்பாஸின் 8வது சதமாக பதிவானது.

இந்தச் சதத்தின் மூலம் மிகவும் இளம்வயதில் அதிக சதம் விளாசிய இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன்செய்துள்ளார். 22 வயதில் அதிக சதங்கள் அடித்தவர்கள் ரஹ்மானுல்லா குர்பாஸ்-8 சதங்கள், சச்சின் டெண்டுல்கர்-8 சதங்கள், குயிண்டன் டிகாக்-8 சதங்கள், விராட் கோலி-7 சதங்கள், பாபர் அசாம்-6 சதங்கள், உபுல் தரங்கா-6 சதங்கள் ரஹ்மானுல்லா குர்பாஸ் 8 வது சதத்தை நிறைவு செய்யும்போது அவருக்கு வயது 22 ஆண்டுகள் 357 நாள்கள். அதேபோல சச்சினும் 22 ஆண்டுகள் 357 நாள்களில் 8 சதங்கள் அடித்து இருவரும் இரண்டாவது இடத்தில் உள்ளனர். 22 ஆண்டுகள் 312 நாள்களில் 8 சதங்கள் அடித்து தென்னாப்பிரிக்க விக்கெட் கீப்பர் குயிண்டன் டிகாக் முதலிடத்தில் உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து