முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புல்டோசர் நடவடிக்கை முற்றிலும் சட்டவிரோதம் : சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

புதன்கிழமை, 13 நவம்பர் 2024      இந்தியா
Bulldozer 2024-11-13

Source: provided

புதுடெல்லி : குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களின் வீடுகளை அதிகாரிகள் புல்டோசர் கொண்டு இடிப்பது சட்டவிரோதம் என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.

குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களின் வீடுகளை புல்டோசர் கொண்டு இடிக்கும் நடவடிக்கை வட மாநிலங்களில் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. குற்ற வழக்குகளில் கைதானவர்கள், தொடர்புடையவர்களின் வீடுகளை அதிகாரிகள் புல்டோசர்கள் கொண்டு இடிக்கும் நடவடிக்கை பேசுபொருளாக உள்ளது.

இதனிடையே, அதிகாரிகள் மேற்கொள்ளும் இந்த புல்டோசர் நடவடிக்கையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் பிஆர் கவய், விகே விஷ்வநாதன் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. 

அப்போது, குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களின் வீடுகளை அதிகாரிகள் புல்டோசர் கொண்டு இடிப்பது சட்டவிரோதம் என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்தது. குற்ற வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்டாலும், குற்றவாளியாக அறிவிக்கப்பட்டாலும் அவர்களது வீடுகளை இடிப்பது முற்றிலும் சட்டவிரோதமானது. 

புல்டோசர் நடவடிக்கை மூலம் வீடு இடிப்பால் பெண்கள், குழந்தைகள் இரவில் நடுத்தெருவில் நிற்பதை பார்க்க விரும்பவில்லை.   எந்த வீட்டையும் இடிப்பதற்கு முன் 15 நாட்களுக்கு முன்பாக நோட்டீஸ் அனுப்ப வேண்டும். 

வீடு இடிக்கும் நடைமுறைகளை வீடியோவாக எடுக்க வேண்டும். அரசு நிலத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை இடிக்கும் போது இந்த விதி பொருந்தாது. கட்டிட இடிப்பு தொடர்பாக கோர்ட்டு உத்தரவு பிறப்பித்திருந்தால் இந்த உத்தரவு பொருந்தாது என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து