முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பதவியை மறந்து விமர்சித்தால் தக்க பதிலடி கொடுக்கப்படும்: எடப்பாடி

புதன்கிழமை, 13 நவம்பர் 2024      தமிழகம்
EPS 2024-11-02

Source: provided

கோவை : எதிர்க்கட்சித் தலைவரை, பதவியை மறந்து முதல்வர் ஸ்டாலின் விமர்சிக்கிறார். இதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

கோவையில் நிருபர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி கூறியதாவது, 

அ.தி.மு.க., ஆட்சியில் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்ட திட்டங்களை, ஸ்டாலின் தலைமையிலான அரசு ஸ்டிக்கர் ஒட்டுகிறது. பல திட்டங்களை முடக்கி வைத்துள்ளனர். ஒரு எதிர்க்கட்சித் தலைவரை ஊர்ந்து சென்றார், பறந்து சென்றார், கரப்பான் பூச்சி போல் சென்றார் என்று முதல்வர் ஸ்டாலின் பதவியை மறந்து தன்னிலை மறந்து விமர்சிக்கிறார்.

நாங்கள் யாரையும் தவறாக விமர்சிக்கவில்லை. எங்களைப் பற்றி ஆளும் கட்சியினர் தவறுதலாக விமர்சித்தால் அதற்குத் தக்க பதிலடி கொடுப்போம். ஒரு முதல்வர் தனது பதவியை மறந்து விமர்சனம் செய்யலாமா? பல பணிகள் ஆமை வேகத்தில் நடக்கிறது. 

தி.மு.க., ஆட்சியில் எந்த திட்டமும் அறிவிக்கப்படாத நிலையில் முதல்வர் ஸ்டாலின் எப்படி ஆய்வு செய்ய முடியும்? மக்களைக் குழப்பி அரசியல் ஆதாயம் தேட தி.மு.க., முயற்சிக்கிறது. இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து