எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ. 190.40 கோடி மதிப்பிலான 29 புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று அடிக்கல் நாட்டினார். மேலும் ரூ.42.75 கோடி மதிப்பிலான 27 முடிவுற்ற திட்டப் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,
சென்னை தலைமைச் செயலகத்தில், முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 190 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 18 திருக்கோவில்களில் 25 புதிய திட்டப் பணிகள் மற்றும் 4 அலுவலக கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டி, 42 கோடியே 75 லட்சம் ரூபாய் செலவில் 15 திருக்கோவில்களில் 25 முடிவுற்ற திட்டப் பணிகள் மற்றும் 2 அலுவலகக் கட்டடங்களை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றத்திலிருந்து இந்து சமய அறநிலையத்துறை வாயிலாக சீரிய முறையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதோடு, சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட புதிய அறிவிப்புகளும் தொடர்ந்து நிறைவேற்றபட்டு வருகின்றன.
18 திருக்கோவில்களில் 25 புதிய திட்டப் பணிகள் மற்றும் 4 அலுவலகக் கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டுதல், மதுரை மாவட்டம், அழகர்கோவில், அருள்மிகு கள்ளழகர் திருக்கோவிலில் 49.25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பெருந்திட்ட வளாக மேம்பாட்டு பணிகள் மற்றும் பணியாளர் குடியிருப்பு கட்டும் பணிகள், திருவண்ணாமலை, அருள்மிகு அருணாச்சலேசுவரர் திருக்கோவிலில் 44.57 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பெருந்திட்ட வளாக மேம்பாட்டு பணிகள், குபேரலிங்கம் அருகில் வணிக வளாகம் கட்டும் பணி, கோபுரங்கள் மற்றும் விமானங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கும் பணி மற்றும் ஏழு தீர்த்த குளங்களை சீரமைக்கும் பணிகள், தண்டராம்பட்டு வட்டம், வானாபுரம், அருள்மிகு பிள்ளையார் மாரியம்மன் திருக்கோவிலில் 5.63 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய திருமண மண்டபம் கட்டும் பணி,
திருவண்ணாமலை, அருள்மிகு நந்தவக் கட்டளையில் 1.07 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய வணிக வளாகம் கட்டும் பணி, திருச்சிராப்பள்ளி மாவட்டம், சமயபுரம், அருள்மிகு மாரியம்மன் திருக்கோவிலில் 25.62 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பெருவள வாய்க்கால் இருபுற கரைகளிலும் திருக்கோவில் வாகன நிறுத்துமிடத்திற்கு செல்ல சாலைகள் அமைத்தல், தடுப்புச்சுவர் கட்டுதல், புதிதாக திருக்கோவில் நுழைவுவாயில் அமைக்கும் பணி, கோபுரங்கள் மற்றும் விமானங்களை வண்ண விளக்குகளால் அங்கரிக்கும் பணிகள்,
நாகப்பட்டினம் மாவட்டம், துளசியாபட்டினம், அருள்மிகு ஔவையார் மற்றும் விஸ்வநாத சுவாமி திருக்கோவிலில் 18.95 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஔவையார் மணி மண்டபம் கட்டும் பணி; கோயம்புத்தூர் மாவட்டம், மருதமலை, அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் 6.90 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேற்கொள்ளும் பணி,
கருமத்தம்பட்டி, அருள்மிகு சென்னியாண்டவர் திருக்கோவிலில் 2.29 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய ஐந்து நிலை இராஜகோபுரம் அமைக்கும் பணி, திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லூர், அருள்மிகு கொண்டத்துக்காளியம்மன் திருக்கோவிலில் 5.40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய திருமண மண்டபம் கட்டும் பணி; திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி, அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் 3.80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சென்னையில் இருந்து திருப்பதிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கான தங்கும் விடுதி கட்டும் பணி,
ஈரோடு மாவட்டம், கொடுமுடி, அருள்மிகு சடையப்பசுவாமி திருக்கோவிலில் 3.80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய கருங்கல் முன் மண்டபம் கட்டும் பணி; பெருந்துறை வட்டம், தங்கமேடு, அருள்மிகு தம்பிகலை ஜயன் சுவாமி திருக்கோவிலில் 1.10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய அன்னதானக் கூடம் கட்டும் பணி; பண்ணாரி, அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் 3 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டும் பணி,
திண்டுக்கல் மாவட்டம், கீரனூர், அருள்மிகு வாகீஸ்வரர் திருக்கோவிலில் 3.80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய திருமண மண்டபம் கட்டும் பணி, செங்கல்பட்டு மாவட்டம், அரசர்கோவில், அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோவிலில் 2.42 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய ஐந்து நிலை இராஜகோபுரம் கட்டும் பணி; சென்னை, திருவல்லிக்கேணி, அருள்மிகு தீர்த்தபாலீஸ்வரர் திருக்கோவிலில் 2.35 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்நோக்கு மண்டபம் கட்டும் பணி,
நாமக்கல் மாவட்டம், வளப்பூர் நாடு, அருள்மிகு அறப்பளீஸ்வரர் சுவாமி திருக்கோவிலில் 2.10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய மூன்று நிலை இராஜகோபுரம் அமைக்கும் பணி, கூவைமலை, அருள்மிகு பழனியாண்டவர் திருக்கோவிலில் 1.35 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சுற்றுபிரகார கல் மண்டபம் கட்டும் பணி, தூத்துக்குடியில் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மண்டல இணை ஆணையர் அலுவலகம் கட்டும் பணி; திருநெல்வேலியில் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மண்டல இணை ஆணையர் அலுவலகம் கட்டும் பணி,
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் 1.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உதவி ஆணையர் அலுவலகம் கட்டும் பணி; கிருஷ்ணகிரியில் 1.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உதவி ஆணையர் அலுவலகம் கட்டும் பணி என மொத்தம் 190.40 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 29 புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்.
மேலும் கோவை மாவட்டம், மருதமலை, அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் 4.39 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள சீரமைக்கப்பட்ட திருக்கோவில் மலைபாதை, மலைமேல் யாகசாலை மற்றும் திருக்கோவில் அடிவார நுழைவாயில்,
மேட்டுப்பாளையம், அருள்மிகு வனபத்ரகாளியம்மன் திருக்கோவிலில் 1.79 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள படித்துறை, 1000 லிட்டர் திறன் கொண்ட மூன்று நீர் சுத்திகரிப்பு நிலையங்கள், குழந்தைகளுக்கு பாலூட்டும் அறை மற்றும் சேவார்த்திகள் தங்கும் விடுதி,
நாகப்பட்டினம் மாவட்டம், சிக்கல், அருள்மிகு நவநீதேஸ்வரசுவாமி திருக்கோவிலில் 1.07 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள புதிய வணிக வளாகம், திருச்சிராப்பள்ளி மாவட்டம், சமயபுரம், அருள்மிகு மாரியம்மன் திருக்கோவிலில் 4.63 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள அமாவாசை மண்டபம் மற்றும் குங்குமம் தயாரிக்கும் கூடம்,
மயிலாடுதுறை மாவட்டம், திருப்புங்கூர், அருள்மிகு சிவலோகநாதர் திருக்கோவிலில் 3.20 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள புதிய திருமண மண்டபம், திருவண்ணாமலை மாவட்டம், அ.கோ.படைவீடு, அருள்மிகு ரேணுகாம்பாள் திருக்கோவிலில் 3.65 கோடி ரூபாய் செலவில் புதிய திருமண மண்டபம் மற்றும் செயல் அலுவலர் அலுவலகம்,
காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர், அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் 2.95 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள புதிய திருமண மண்டபம்; கடலூர் மாவட்டம், திருவந்திபுரம், அருள்மிகு தேவநாதசுவாமி திருக்கோவிலில் 2.80 கோடி ரூபாய் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள புதிய திருமண மண்டபம்,
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம், அருள்மிகு அடைக்கலம் காத்த அய்யனார் மற்றும் பத்ரகாளியம்மன் திருக்கோவிலில் 2.73 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள வணிக வளாகம், பக்தர்கள் தங்கும் விடுதி மற்றும் வாகன நிறுத்துமிடம், கரூர் மாவட்டம் தாந்தோன்றிமலை, அருள்மிகு கல்யாண வெங்கடரமண சுவாமி திருக்கோவிலில் 2.09 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள முடி காணிக்கை மண்டபம்,
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர், அருள்மிகு அங்காளம்மன் திருக்கோவிலில் 1.95 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள வணிக வளாகம், திருவள்ளூர் மாவட்டம், திருவேற்காடு, அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோவிலில் 1.54 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள வணிக வளாகம் மற்றும் வாகன நிறுத்துமிடம்,
திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம், தானிப்பாடி, அருள்மிகு பிள்ளையார் மற்றும் மாரியம்மன் திருக்கோவிலில் 76 லட்சம் ரூபாய் செலவில் புதிய வணிக வளாகம்; கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், அருள்மிகு காளிகாம்பாள் காமாட்டீஸ்வரர் திருக்கோவிலில் 76 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள மலர் வணிக வளாகம்,
ஈரோடு மாவட்டம், சென்னிமலை, அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் 61 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள புதிய வணிக வளாகம், நாகப்பட்டினத்தில் 4.18 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த மண்டல இணை ஆணையர் அலுவலகம், சேலத்தில் 3.65 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த மண்டல இணை ஆணையர் அலுவலகம் என மொத்தம் 42.75 கோடி ரூபாய் செலவிலான 27 முடிவுற்ற திட்டப் பணிகளை முதல்வர் திறந்து வைத்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 month 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 month 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 months 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 14-11-2024.
14 Nov 2024 -
சபரிமலையில் மண்டல கால பூஜைக்காக ஐயப்பன் கோவில் நடை இன்று திறக்கப்படுகிறது
14 Nov 2024திருவனந்தபுரம், மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை திறக்கப்படுகிறது.
-
தகுதியுள்ள அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும்: தூத்துக்குடியில் துணை முதல்வர் உதயநிதி பேச்சு
14 Nov 2024தூத்துக்குடி, தகுதியுள்ள அனைத்து மகளிருக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதிபட தெரிவித்தார்.
-
ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ சென்னை அப்பல்லோவில் அனுமதி
14 Nov 2024சென்னை, ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
-
குழந்தைகள் தினத்தை முன்னிட்டு அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து
14 Nov 2024சென்னை, நாளைய உலகின் சிற்பிகளாகிய குழந்தைகள் அனைவருக்கும் குழந்தைகள் தின வாழ்த்துகள் என தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து தெரிவித்துள்ளார். 
-
அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுடன் வருபவர்களுக்கு டேக் அறிமுகப்படுத்த முடிவு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
14 Nov 2024சென்னை, நோயாளிகளுடன் வருபவர்களுக்கு சிவப்பு, மஞ்சள், பச்சை, நீல வண்ண டேக் அறிமுகப்படுத்தப்படும் என்று மருத்துவத்துறை மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரம
-
பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை: எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்
14 Nov 2024கிருஷ்ணகிரி, நான் கூட்டணிக்கு வருமாறு வேண்டுகோள் விடுப்பது மற்ற கட்சிகளுக்கு தான். பா.ஜ.க.
-
ஜெயங்கொண்டம் அருகே ரூ.1000 கோடி மதிப்பில் காலணி உற்பத்தி தொழிற்சாலை: முதல்வர் ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டுகிறார்
14 Nov 2024திருச்சி, ஜெயங்கொண்டம் அருகே உள்ள மகிமைபுரத்தில் 130 ஏக்கர் பரப்பளவில் செயல்பட்டு வரும் சிப்காட் தொழில் வளாகத்தில், தைவான் நாட்டை சேர்ந்த டீன் ஷூஸ் குழுமம் ரூ.1,000 கோட
-
திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் வைகுண்ட ஏகாதசி பந்தல்கால் நடும் நிகழ்ச்சி: ஜனவரி 10-ல் சொர்க்கவாசல் திறப்பு
14 Nov 2024திருச்சி, திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஆயிரங்கால் மண்டபம் அருகே பந்தல் கால் நடும் நிகழ்ச்சி நேற்று காலை நடைபெற்றது.
-
பிரதமர் மோடிக்கு உயரிய தேசிய விருது: டொமினிகா அரசு அறிவிப்பு
14 Nov 2024புது டெல்லி, காமன்வெல்த் ஆப் டொமினிகா தனது உயரிய தேசிய விருதான டொமினிகா விருதை பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது.
-
ஜாமின் மனு தள்ளுபடி எதிரொலி: நடிகை கஸ்தூரியை பிடிக்க 2 தனிப்படைகள் அமைப்பு
14 Nov 2024சென்னை, மதுரை ஐகோர்ட் கிளையில் ஜாமின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் தலைமறைவாக உள்ள நடிகை கஸ்தூரியை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
14 Nov 2024சென்னை, தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
இளங்கலை படிப்பை முன்கூட்டியே முடிக்கும் புதிய முறை வரும் கல்வி ஆண்டில் அமல்: யு.ஜி.சி.
14 Nov 2024சென்னை, இளங்கலை பட்டப்படிப்பை முன்கூட்டியே படித்து முடிக்கும் புதிய முறை வரும் கல்வி ஆண்டில் அமல்படுத்தப்படும் என யு.சி.ஜி.
-
குழந்தைகள் தினம்: முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து
14 Nov 2024சென்னை, குழந்தைகள் தினத்தையொட்டி முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
குடிநீர் கட்டணங்களுக்கு பசுமை வரி: கர்நாடக அரசு புதிய திட்டம்
14 Nov 2024பெங்களூரூ, ஆறுகளை பாதுகாக்கும் நடவடிக்கையாக குடிநீர் கட்டணங்களுடன் பசுமை வரியை விதிக்க கர்நாடக வனத்துறை முடிவு செய்துள்ளது.
-
ஹிஸ்புல்லா நடத்திய தாக்குதலில் 6 இஸ்ரேல் ராணுவ வீரர்கள் பலி
14 Nov 2024பெய்ரூட், ஹிஸ்புல்லா தாக்குதலில் இஸ்ரேல் ராணுவத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்தனர்.
-
ஷிப்ட் முறை தேர்வு அறிவிப்புக்கு எதிர்ப்பு: உ.பி. அரசு பணியாளர் தேர்வாணையத்துக்கு எதிராக தொடரும் மாணவர்கள் போராட்டம்:
14 Nov 2024லக்னோ, ஷிப்ட் முறை தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து உத்தரப்பிரதேசத்தில் அரசு பணியாளர் தேர்வாணையத்துக்கு மாணவர்களின் போராட்டம் 4-வது நாளாக தொடர்கிறது.
-
144 தடை உத்தரவு மீறல் வழக்கு: இம்ரான் கானை விடுதலை செய்து இஸ்லாமாபாத் கோர்ட் உத்தரவு
14 Nov 2024இஸ்லாமாபாத், 144 தடை உத்தரவு விதிமீறல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்து மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.
-
அமெரிக்க உளவுத்துறை இயக்குனராக துளசி கபார்டை நியமித்தார் டிரம்ப்
14 Nov 2024வாஷிங்டன், அமெரிக்க உளவுத்துறை இயக்குனராக முன்னாள் எம்.பி. துளசி கபார்டை நியமனம் செய்துள்ளார் டிரம்ப்.
-
ராஜஸ்தானில் தேர்தல் பணியில் இருந்த துணை கலெக்டரை தாக்கிய சுயேச்சை வேட்பாளர் கைது
14 Nov 2024ஜெய்ப்பூர், ராஜஸ்தானில் தேர்தல் பணியில் இருந்த துணை கலெக்டரை சுயேச்சை வேட்பாளர் கன்னத்தில் அறைந்தார்.
-
சிதம்பரம் நடராஜர் கோவிலில் புதிய கொடி மரம் அமைக்கப்படும்: ஐகோர்ட்டில் அறநிலையத்துறை உறுதி
14 Nov 2024சென்னை, சிதம்பரம் நடராஜர் கோவிலில் பழைய கொடி மரத்தை அகற்றி விட்டு புதிய கொடி மரம் அமைக்கப்படும் என சென்னை ஐகோர்ட்டில் இந்து சமய அறநிலையத்துறை உறுதி அளித்துள்ளது.
-
மருத்துவர் சுப்பையா கொலை வழக்கு: தமிழக அரசின் மேல் முறையீட்டு மனுவை ஏற்றது சுப்ரீம் கோர்ட்டு
14 Nov 2024புது டெல்லி, மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் தமிழக அரசின் மேல் முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட்டு விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது.
-
தி கார்டியன் நாளிதழ் எக்ஸ் தளத்தில் இருந்து விலகல்: எலான் மஸ்க் மீது பரபரப்பு குற்றச்சாட்டு
14 Nov 2024லண்டன், 200 ஆண்டுகள் பாரம்பரிய மிக்க இங்கிலாந்தை சேர்ந்த ஆங்கில செய்தி நிறுவனமான தி கார்டியன் டுவிட்டர் தளத்தில் இருந்து விலகியுள்ளது.
-
வெடிகுண்டு மிரட்டல் எதிரொலி: ராய்ப்பூரில் இண்டிகோ விமானம் அவசரமாக தரையிறக்கம்
14 Nov 2024ராய்ப்பூர், நாக்பூரில் இருந்து கொல்கத்தாவுக்கு புறப்பட்ட இண்டிகோ விமானத்துக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் காரணமாக விமானம் அவசர அவசரமாக ராய்ப்பூரில் தரையிறக்கப்பட
-
ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் புகழாரம்
14 Nov 2024புது டெல்லி, சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாள் நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்ட நிலையில் பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் புகழா