முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கைதான ஞானசேகரன் வேறு ஒருவரிடம் பேசினார்: சிறப்பு விசாரணை குழுவிடம் தெரிவித்த பல்கலை. மாணவி

சனிக்கிழமை, 4 ஜனவரி 2025      தமிழகம்
gnanasekar 2025-01-04

Source: provided

சென்னை: பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரன் வேறு ஒருவரிடம் பேசினார் என்பதை சிறப்பு விசாரணை குழுவிடம் பாதிக்கப்பட்ட பல்கலை. மாணவி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பாக ஞானசேகரன் என்பவனை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக விசாரிக்க சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்பட்டது.

இதனிடையே, மாணவி அளித்த புகாரில், ஞானசேகரன் பாலியல் வன்கொடுமை செய்ததையும், அப்போது ஞானசேகரன் 'சார்' என்று யாரையோ குறிப்பிட்டு பேசினார் என்று கூறியிருந்தார். இதனால் எதிர்க்கட்சிகள் 'யார் அந்த சார்' என்று கேட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனிடையே 'சார்' என்று யாரும் இல்லை என்றும் எதிர்க்கட்சிகள் மாணவி விவகாரத்தில் அரசியல் செய்வதாக கூறிவந்தனர்.

இந்த நிலையில், ஞானசேகரன் செல்போனில் ஒருவரை தொடர்பு கொண்டு பேசினார் என்று சிறப்பு விசாரணை குழுவிடம் மாணவி திட்டவட்டமாக கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது. தொலைப்பேசி அழைப்பு வந்தபோது தான் மிரட்டிவிட்டு வந்துவிடுவேன் என ஞானசேரகன் பேசியதாகவும் 4 முறைக்கு மேல் ஞானசேகரன வேறு ஒரு சாரிடமும் இருக்க வேண்டும் என்று மிரட்டியதாக மாணவி கூறியுள்ளார்.

இதனிடையே, ஞானசேகரனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட செல்போனை ஆய்வு செய்தபோது ஆபாச வீடியோக்கள் இருந்தது. அந்த வீடியோக்களில் இருந்த பெண்கள் மற்றும் மாணவிகள் என 4 பேரை சிறப்பு விசாரணைக்குழு கண்டறிந்துள்ளது. இதனை தொடர்ந்து அவர்களிடம் புகார் பெற சிறப்பு விசாரணைக்குழு அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து