முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழ்நாட்டை சேர்நத பானி பூரி வியாபாரிக்கு ஜி.எஸ்.டி. நோட்டீஸ்

சனிக்கிழமை, 4 ஜனவரி 2025      தமிழகம்
gst 2025-01-07

Source: provided

சென்னை: தமிழ்நாட்டை சேர்நத பானி பூரி கடை வியாபாரிக்கு ஜி.எஸ்.டி. நோட்டீஸ் அனுப்பப்பட்டதால் பரபரப்பு நிலவுகிறது.

மத்திய அரசின் சரக்கு மற்றும் சேவை வரி துறை தமிழ்நாட்டை சேர்நத பானி பூரி வியாபாரிக்கு ஜி.எஸ்.டி. பதிவுக்கான நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அந்த பானி பூரி விற்பனையாளர் 2023 முதல் 2024-ம் ஆண்டில் ஆன்லைன் மூலம் பானி பூரி விற்பனை செய்து ரூ.40 லட்சம் வருமானம் ஈட்டியுள்ளார்.

ஆன்லைன் பேமெண்ட் மூலம் பானி பூரி விற்பனையாளரின் பரிவர்த்தனைகளைக் கணக்கில் கொண்டு ஜி.எஸ்.டி.  நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.வங்கிகள் மட்டுமின்றி யு.பி.ஐ. அப்ளிகேஷன்களில் அதிக பரிவர்த்தனை செய்த நபர்களின் விவரங்களும் வருமான வரித்துறைக்கு அனுப்பப்படும். அதன்படி இந்த பானி பூரி வியாபாரியை கண்டறிந்து அனுப்பட்டுள்ள நோட்டீஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த நோட்டீஸில், பிரிவு 70-இன் கீழ் பானி பூரி விற்பனையாளரை நேரில் வந்து ஆஜராகி, ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு கூறப்பட்டுள்ளது. மேலும் வரம்பை தாண்டிய பிறகு ஜி.எஸ்.டி. பதிவு பெறாமல் சேவைகளை வழங்குவது குற்றம் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து